நடிகர் சிம்பு நடித்துள்ள ’பத்து தல’ படத்தில் இடம் பெற்றுள்ள ‘ராவடி’ பாடலின் வீடியோ இன்று (மார்ச் 25 ) வெளியாகியுள்ளது.
நடிகர் சிம்பு தற்போது இயக்குனர் ஒபெலி.N.கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பத்து தல’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
கௌதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர், கலையரசன்,அனு சித்தாரா மற்றும் டீஜே அருணாசலம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கும் ’பத்து தல’ படத்திற்கு ஃபரூக்.J.பாஷா ஒளிப்பதிவில், பிரவீன்.KL படத்தொகுப்பு செய்ய இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இந்த திரைப்படம் வரும் மார்ச் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக படத்தில் இடம்பெற்ற ‘ராவடி’ எனும் பாடலின் வீடியோ இன்று (மார்ச் 25 ) வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி தற்போது ‘ராவடி’ வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. பாடலில் ஆர்யாவின் மனைவியும் நடிகையுமான சயீஷா குத்தாட்டம் ஆடியுள்ளார். இந்த பாடலானது தற்போது ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
“மோடி என்றால் ஊழல்”- குஷ்புவுக்கு என்ன தண்டனை? கொதிக்கும் காங்கிரஸ்
ராகுல் பதவி பறிப்புக்கும், பாஜகவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை – ராம சீனிவாசன்