நடிகை பிரியா பவானி ஷங்கர் தன்னுடைய காதலன் ராஜ்வேல் குறித்து, மிகவும் உருக்கமாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
நடிகை பிரியா பவானி ஷங்கர் தற்போது விஷாலின் ரத்னம், கமல் ஹாசனின் இந்தியன் 2 மற்றும் பீமா(தெலுங்கு) ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தன்னுடைய காதலர் ராஜ்வேல்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருக்கும் பதிவொன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பிரியா தன்னுடைய பதிவில், ”இந்த பையன் இருக்கிறாரே இவர்தான் என்னுடைய சிறந்த நண்பர். நாங்கள் எப்போதும் ஒன்றாகவே சிரிக்கிறோம், சண்டை இடுகிறோம், அழுகிறோம். அடிக்கடி மேக்கப்பும் செய்து கொள்கிறோம். அவர் சத்தமாகவும் நம்பிக்கையுடனும் பல தவறான பாடல் வரிகளை பாடிக்கொண்டிருக்கிறார்.
நாங்கள் இருவருமே ஏ டூ இஸட் வேறு வேறு தான். ஆனாலும் என்னை அவர் முழுமையடைய செய்கிறார். நாங்கள் இருவரும் வித்தியாசமாக இருந்தாலும் அவரோடு நான் அன்பாகவும் ஜாலியாகவும் இருக்கிறேன்.
அதுபோல அவரோடு தான் நான் நிம்மதியாக உணர்கிறேன். அவரும் என்னோடு இருக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறார்.
அவரோடு நான் அமைதியாக உட்கார்ந்து ஒரு அழகான சூரிய அஸ்தமனத்தை பார்த்து என்னுடைய மனதில் இருக்கும் கஷ்டங்களை எல்லாம் பேச முடிகிறது. அதுவே எனக்கு போதும்.
இந்த வாழ்க்கையை நான் ஆனந்தமாக கடக்க கோடி மடங்கு போதும். என்னுடைய ராஜ்வேல்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்றும், இருவர் வானம் வேறென்றாலும்,” என இதயம் எமோஜி பகிர்ந்து உருக்கமாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
தற்போது பிரியா பவானி ஷங்கரின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிரியாவுடன் இணைந்து ரசிகர்களும் ராஜவேல்க்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக பிரியா பவானி ஷங்கர் – ராஜ்வேல் இருவரும் காதலித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பச்சை நிற பட்டு சேலையில் பவதாரிணி உடல் நல்லடக்கம்!
இந்த 5 வீரர்களும் ஐபிஎல்ல ஆடுறது ரொம்ப கஷ்டம்… வெளியான புதிய தகவல்!