பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஜோவிகா விஜயகுமாருக்கு அறிமுகமே தேவையில்லை. நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் 7-ல், நடிகை வனிதாவின் மகள் ஜோவிகா பங்கேற்றார். அவருக்கு வயது 19 தான் என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும் தன்னைவிட வயது மூத்த போட்டியாளர்களை அவர் கையாண்ட விதம் பாராட்டுகளைப் பெற்றது. முதலிடம் பெற்று டைட்டிலை வெல்லுவார் என்று நம்பப்பட்ட நிலையில், ரசிகர்களுக்கு
ஏமாற்றங்களை அளித்து எதிர்பாராமல் வெளியேறினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய உடனே சினிமா பயணத்திற்கான வேலைகளை துவங்கி விட்டார் என்றே சொல்லலாம். புகழ்பெற்ற இயக்குனர் மற்றும் நடிகரான பார்த்திபன் இயக்கும் ‘டீன்ஸ்’ படத்தில் ஜோவிகா பணியாற்றுகிறார் என்ற தகவல் முன்பே வெளியாகியிருந்தது.
இதற்கிடையில் சமூக வலைதளங்களில் நடிகை வனிதா தனது மகளுக்கு நடத்திய போட்டோ ஷூட்களும் சர்ச்சையை கிளப்பியன. இந்நிலையில் சத்தமே இல்லாமல் தனது முதல் படத்தின் பாடலில் அவர் நடித்து முடித்துள்ளார். இதில் அவர் முதல் முறையாக நடனமும் முயற்சி செய்துள்ளார்.
இசையமைப்பாளர் டி. இமானின் இசையில் வெளியாகியிருக்கும் இந்த பாடல் தான் தற்பொழுது கவனம் பெற்று வருகிறது. பாடலை பார்த்த பலரும் ஜோவிகாவா இது என்று வியந்து அவரைப் பாராட்டி வருகின்றனர்.
-பிரியங்கா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
EID 2024: ரம்ஜான் ஸ்பெஷலாக இத்தனை படங்கள் வெளியாகிறதா?
Thalapathy 69: டிவிவி நிறுவனம் அவுட்… முட்டி மோதும் 3 நிறுவனங்கள்?
நடிகை ஆர்த்தியா இது?… அடையாளமே தெரியல… ஷாக்கான ரசிகர்கள்!