விக்ரம் வெற்றி : கமலுடன் இணையும் ரஜினி

சினிமா

தமிழ் சினிமாவில் நான்காவது தலைமுறை கதாநாயக நடிகர்களுடன் களத்தில் போட்டியில் இருப்பவர்கள் ரஜினிகாந்த், மற்றும் கமல்ஹாசன்.

70 வயதை தொட்ட ரஜினி இன்றைய இளம் இயக்குநர்கள் இயக்கத்தில் கபாலி, காலா, பேட்ட, அண்ணாத்தே படங்களில் நடித்தார். இதில் சாதாரண வெற்றி கூட கிடைக்கவில்லை. ஆனால் நான்கு ஆண்டுகளுக்கு பின் குறைவான நாட்கள் மட்டுமே கமல்ஹாசன் நடித்து தயாரித்த விக்ரம் படம் முதலீட்டை போன்று இருமடங்கு லாபத்தை பெற்றுகொடுத்திருக்கிறது. கமலுக்கு அவரது 60 ஆண்டுகால திரையுலக வாழ்க்கையில் விக்ரம் மூலம் கிடைத்த வசூல் மிகப் பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ரஜினி கமல்ஹாசனுடன், தயாரிப்பாளராக, நடிகராக கூட்டணி வைத்துக்கொள்ளும் முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்துக்கு முன்னதாகவே, கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கிறார் என்றும் அந்தப்படத்தை லோகேஷ்கனகராஜ் இயக்குவார் என்றும் சொல்லப்பட்டது. ஆனால், சில காரணங்களால் அது நடக்கவில்லை. அதற்குப் பதிலாகக் கமல்ஹாசன் நாயகனாக நடித்த விக்ரம் படத்தை இயக்கிவிட்டார் லோகேஷ்கனகராஜ்.
இப்போது மீண்டும் கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தைத் தொடங்கத் திட்டமிட்டிருக்கிறார். ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் லோகேஷ்கனகராஜ் இயக்கத்தில் அப்படம் உருவாகும் என்கிறார்கள். ரஜினி இப்போது நெல்சன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். அது அவருடைய 169 ஆவது படம்.

அதற்கடுத்து ரஜினியின் 170 ஆவது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கிறாராம். ரஜினிகாந்த் நெல்சன் படத்தை முடித்துவிட்டு வரவும், லோகேஷ் கனகராஜ், விஜய் படத்தை முடித்துவிட்டு வரவும் சரியாக இருக்கும் எனத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.

இப்படத்தை ராஜ்கமல் நிறுவனத்தோடு இணைந்து ரஜினிகாந்த்தும் தயாரிப்பில் இணையவிருக்கிறாராம். பல வருடங்களாகச் சொந்தத் தயாரிப்பில் ஈடுபடாமல் இருந்த ரஜினிகாந்த், இப்போது இப்படி ஒரு முடிவெடுக்க கமல்ஹாசனின் விக்ரம் படத்துக்குக் கிடைத்த வசூலே காரணம். விக்ரம் படத்தில் கமலஹாசனுக்கு இவ்வளவு லாபமா? என்று வாய்பிளக்காதவர்களே இல்லை. அந்த வரிசையில் ரஜினியும் சேர்ந்திருக்கிறார் என்கிறார்கள் சினிமா வட்டாரத்தில் .

ரஜினி கமல் என ஆளுக்குப் பாதி அதாவது ஐம்பது விழுக்காடு பங்குதாரராக ரஜினியின் நிறுவனம் இணையவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இராமானுஜம்

+1
0
+1
0
+1
0
+1
2
+1
1
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *