அனுஷ்கா 50 : முக்கிய வேடத்தில் விக்ரம் பிரபு.. இயக்குநர் இவரா?

சினிமா

தமிழ், தெலுங்கு என இரு மொழி படங்களிலும் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியவர் நடிகை அனுஷ்கா. இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் வெளியான “பாகுபலி” படத்தின் மூலம் தேவசேனா என்ற கதாபாத்திரமாக உலகம் முழுவதும் பிரபலமானார்.

அதன் பிறகு “இஞ்சி இடுப்பழகி” படத்திற்காக தனது உடல் எடையை அதிகரித்து நடித்த அனுஷ்கா, அந்த படத்திற்கு பின் தனது உடல் எடையை குறைக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டார். 2017 ஆம் ஆண்டு வெளியான “பாகுபலி 2” படத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதில் பெரிதாக ஆர்வம் காட்டாமல் இருந்த அனுஷ்கா கடந்த 2023 ஆம் ஆண்டு “மிஸ் ஷெட்டி மிஸ்டர்  பொலிஷெட்டி” என்ற தெலுங்கு படத்தில் நடித்து ரீ-என்ட்ரி கொடுத்தார்.

அந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் அனுஷ்காவுக்கு எதிர்பார்த்த வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் கிடைத்ததன் காரணமாக 15 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட அந்த படம் 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் ஹிட் பட்டியலில் இணைந்தது.

இந்த படத்திற்கு பின்னர் தமிழ், தெலுங்கு படங்களில் மட்டுமே நடித்து வந்த அனுஷ்கா தற்போது முதன்முறையாக மலையாள படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியானது. மலையாளத்தில் நடிகர் ஜெயசூர்யா நடிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் “Kathanar – The Wild Sorcerer” என்ற படத்தின் மூலம் அனுஷ்கா மலையாள சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார்.

இந்நிலையில் தற்போது பிரபல தெலுங்கு இயக்குநர் கிரிஷ் இயக்கத்தில் “காதி” (Ghaati) என்ற படத்தில் அனுஷ்கா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இது அனுஷ்காவின் 50-வது படம் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் இந்த படத்தின் ப்ரீ லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டு இருக்கிறது.

இந்த படத்தில் அனுஷ்காவுடன் நடிகர் விக்ரம் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த படத்தை ஃபர்ஸ்ட் பிரேம் என்டர்டைன்மெண்ட்ஸ் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது. காதி (Ghaati) படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் வாங்கியுள்ளது.

இயக்குநர் கிரிஷ் இயக்கத்தில் நடிகர்கள் அல்லு அர்ஜுன், அனுஷ்கா நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான “வேதம்” படம் சூப்பர் ஹிட் அடித்தது. அந்த படத்தை தான் தமிழில் நடிகர்கள் சிம்பு, பரத் ஆகியோரை வைத்து “வானம்” என்ற பெயரில் இயக்குனர் கிரிஷ் அவர்களே ரீமேக் செய்து ஹிட் கொடுத்தார். கடைசியாக நடிகர் பவன் கல்யாணை வைத்த “ஹரி ஹர வீர மல்லு” என்ற படத்தை இயக்கத் தொடங்கினார் கிரிஷ்.

ஆனால் ஏதோ சில காரணத்தினால் அந்த படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதால், அந்த இடைப்பட்ட காலத்தை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் நடிகை அனுஷ்காவின் 50வது படமான காதி (Ghaati) படத்தை தற்போது இயக்கியுள்ளார்.

இந்த படம் நிச்சயமாக இயக்குநர் கிரிஷ் அவர்களுக்கும் நடிகை அனுஷ்கா அவர்களுக்கும் மிகப்பெரிய திருப்புமுனை படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கார்த்திக் ராஜா

சந்தானம் படத்தின் உரிமை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

உச்ச நீதிமன்றத்துடன் விளையாடுகிறீர்களா?: பொன்முடி விவகாரத்தில் ஆளுநர் ரவிக்கு கண்டனம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *