‘மிஸ்டர் மனைவி’ சீரியலின் புது ஹீரோயின் இவர்தான்… ஷபானாவுக்கு டஃப் குடுப்பாரா?

சினிமா

ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல் மூலம் பிரபலம் அடைந்தவர் நடிகை ஷபானா. தனது வெள்ளந்தியான நடிப்பின் மூலம் ரசிகர்களை அள்ளிக் குவித்தார். சீரியலில் நடிக்கும்போதே தனது காதலரான நடிகர் ஆரியனையும் கரம் பிடித்தார்.

செம்பருத்தியைத் தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த “மிஸ்டர் மனைவி” என்ற சீரியலில் ஷபானா நாயகியாக நடித்து வந்தார். செம்பருத்தி போல இந்த சீரியலும் அவருக்கு நல்ல பெயரை வாங்கித் தந்தது.

சில தினங்களுக்கு முன்பு இந்த சீரியலில் இருந்து விலகுவதாக ஷபானா அறிவித்தார். இதுகுறித்து அவர், “நிறைய யோசித்து ஒரு கடினமான முடிவை எடுத்துள்ளேன். மிஸ்டர் மனைவி சீரியலில் இருந்து விலகுகிறேன்.

இது அவ்வளவு சுலபமல்ல. ஆனால் இது சரியான நேரம் என்று நினைக்கிறேன். என்னை அஞ்சலியாக ஏற்றுக் கொண்டதற்கு நன்றி. எனது திறமையை வெளிக்காட்டும் நல்ல ரோல்களை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.

சீக்கிரமே வேறு ஒரு ப்ராஜெக்ட் மூலம் உங்களை சந்திக்கிறேன்”, என்று கூறியிருந்தார். இதையடுத்து இந்த சீரியலில் அடுத்த அஞ்சலியாக நடிக்கப் போவது யார்? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் நிலவி வந்தது.

இந்நிலையில் நடிகை தேப்ஜானி மோடாக் அஞ்சலி கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் சன் டிவியில் ஒளிபரப்பான ‘வானத்தைப் போல’என்ற சீரியலில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

புது அஞ்சலியாக தேப்ஜானி மோடாக் ரசிகர்களைக் கவர்வாரா? என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்கலாம்.

-பிரியங்கா 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

“பாஜக 150 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறாது”: அடித்து சொல்லும் ராகுல்

இன்னும் எதுக்கெல்லாம் காசு குடுக்கணும்?… முன்னாடியே சொல்லிடுங்க மஸ்க்…!

Thangalaan: ஆஸ்கர் உறுதி! ‘சீயான்’ விக்ரமின் பர்த்டே ட்ரீட்… புது வீடியோ ரிலீஸ்!

+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
1