நடிகர் விஜயகுமாரின் வீடு தற்போது திருமண கொண்டாட்டங்களால் களைகட்டியுள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
நடிகர் விஜயகுமாரின் பேத்தியும், டாக்டருமான தியாவுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.
நடிகர் விஜயகுமாரின் மூத்த மகள் அனிதா விஜயகுமார். டாக்டரான இவர் தற்போது கணவர், குழந்தைகளுடன் கத்தாரில் வசித்து வருகிறார்.
இவரின் மகள் தியாவுக்கு இன்னும் சிலநாட்களில் திருமணம் நடைபெறவிருக்கிறது. தியாவை மணக்கவிருக்கும் மாப்பிள்ளை பெயர் தில்லன்.
#Arunvijay Family Wedding 🎇🎉🎊❤😍 pic.twitter.com/LFPmSj5QSA
— Manjari (@mazhil11) February 17, 2024
தில்லன்-தியா இருவருக்கும் கடந்தாண்டு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்தநிலையில் தற்போது திருமண பந்தத்தில் தியா-தில்லன் இணையவுள்ளனர். அதன்படி சென்னையில் உள்ள பீச் ரிசார்ட் ஒன்றில் இவர்களின் திருமணம் மிகவும் விமரிசையாக நடைபெறவுள்ளது.
இதில் கலந்து கொள்ள நடிகர்கள் ரஜினிகாந்த், சூர்யா, தனுஷ் போன்றோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம். இதுதவிர மேலும் பல பிரபலங்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளதாகத் தெரிகிறது.
இந்த நிலையில் திருமணம் தொடர்பான கொண்டாட்டங்கள் தற்போது களைகட்ட ஆரம்பித்துள்ளன. அந்த வகையில் மெஹந்தி பங்க்ஷன் அண்மையில் விமரிசையாக நடைபெற்றுள்ளது.
இதில் அனிதாவின் சகோதரிகள் அவரின் சகோதரரும், நடிகருமான அருண் விஜய் மற்றும் அப்பா விஜயகுமார் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகின்றன.
Anitha Vijayakumar Daughter #Wedding Video 🎊🎉❤ #arunvijay pic.twitter.com/7vrTt9oSMv
— Manjari (@mazhil11) February 17, 2024
வீடியோவில் தாய்மாமன் அருண் விஜய் முகூர்த்த பந்தக்கால் நட, பட்டு வேட்டி சட்டையில் விஜயகுமார் உற்சாகமாக சிரித்த முகத்துடன் வருகிறார். மொத்த சொந்தங்களும் ஒன்று கூடியதால் அந்த இடமே மகிழ்ச்சியால் தளும்பி வழிகிறது.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் திறக்கப்படுகிறதா ஸ்டெர்லைட்? ஆலை வழக்கில் என்ன நடக்கிறது?
“யார் பிரிவினையைத் தூண்டுவது?”: நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் கண்டனம்!