“நான் சாதாரண கணக்கு வாத்தியார்” – இருபது வேடங்களில் மிரட்டும் கோப்ரா விக்ரம்

சினிமா

நடிகர் விக்ரம் 20க்கும் மேற்பட்ட தோற்றங்களில் நடித்திருக்கும் ‘கோப்ரா’ படத்தின் ட்ரைலர் இன்று (ஆகஸ்ட் 25) வெளியானது.

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விக்ரம் 20க்கும் மேற்பட்ட தோற்றங்களில் நடித்துள்ள படம் ‘கோப்ரா‘.

இதில் விக்ரமுடன் இணைந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், ஸ்ரீநிதி ஷெட்டி, மிருணாளினி, லால், கனிகா, பத்மப்ரியா, பாபு ஆண்டனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தமிழகமெங்கும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை வெளியிட இருக்கிறது. இப்படம் வரும் ஆகஸ்ட் 31ம் தேதி வெளியாக இருக்கிறது.

கோப்ரா’ திரைப்படப் பணிகள் கொரோனா பரவல் காரணமாக கிட்டதட்ட மூன்று ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்தது. கடந்த பிப்ரவரி மாதம் முழு படப்பிடிப்பும் நிறைவடைந்தது. தொடர்ந்து படத்தின் போஸ்டர்கள், பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இத்திரைப்படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி மதுரை அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் ஆகஸ்ட் 24ம் தேதி நடைபெற்றது.

மேலும் இப்படத்தைப் பிரபலபடுத்துவதற்காக விக்ரம் தலைமையிலான படக்குழுவினர் திருச்சி, கோவை உள்ளிட்ட பல இடங்களில் கல்லூரிகளிலும், முன்னணி வணிக வளாகங்களிலும் ரசிகர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

இந்த நிலையில் தற்போது இந்தப் படத்தின் ட்ரைலர் இன்று (ஆகஸ்ட் 25) வெளியாகியுள்ளது.

அதில், நடிகர் விக்ரம் அப்பாவித்தனமாகப் பேசியிருக்கும், “நான் சாதாரண மேத்ஸ் வாத்தியார்” என்கிற வசனம் சமூக வலைதளங்களில் பயங்கர வைரலாகி வருகிறது.

ஜெ.பிரகாஷ்

‘கோப்ரா’ சின்ன ஃபைட் : பெரிய சமாதானம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *