நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சையாக பேசியது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக நடிகர் மன்சூர் அலிகானுக்கு ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் தனலெட்சுமி இன்று (நவம்பர் 22) சம்மன் கொடுத்துள்ளார்.
லியோ திரைப்படத்தில் நடிகை த்ரிஷாவுடன் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்று நடிகர் மன்சூர் அலிகான் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். அவரது பேச்சுக்கு திரை பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த தமிழக டிஜிபிக்கு பரிந்துரை செய்தது.
தேசிய மகளிர் ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் மன்சூர் அலிகான் மீது சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்தநிலையில் மன்சூர் அலிகான் நாளை விசாரணைக்கு ஆஜராக ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் தனலெட்சுமி சார்பில் அவருக்கு சம்மன் கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மன்சூர் அலிகான் வீட்டிற்கு சென்ற காவல் அதிகாரிகள் அவர் வீட்டில் இல்லாததால் மனைவியிடம் சம்மன் நகலை சமர்ப்பித்துள்ளனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இந்திய அணி தோல்விக்கு காரணம் இதுதான்: கவுதம் கம்பீர்
அரபு நாடுகளில் மம்முட்டி படத்திற்கு தடை!