நடிகர் ஷர்வானந்த் பெண் குழந்தைக்கு அப்பாவானதாக மகிழ்ச்சியுடன் சமூக வலைதளத்தில் அறிவித்திருக்கிறார்.
தமிழில் ‘காதல்னா சும்மா இல்லை’ படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் ஷர்வானந்த் தொடர்ந்து ‘நாளை நமதே’, ‘எங்கேயும் எப்போதும்’, ‘ஜேகே என்னும் நண்பனின் வாழ்க்கை’ போன்ற தமிழ் படங்களில் நடித்தார்.
அதற்குப்பிறகு அவர் தமிழ் படங்களில் நடிக்கவில்லை. தற்போது தெலுங்கு படங்களில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார். இதற்கிடையில் கடந்த 2௦23-ம் ஆண்டு ரக்ஷிதா ஷெட்டி என்பவரை ஷர்வானந்த் திருமணம் செய்து கொண்டார்.
ஜெய்ப்பூரில் நடைபெற்ற இந்த திருமணத்தில் ஏராளமான திரையுலக நட்சத்திரங்கள் கலந்து கொண்டு, ஷர்வானந்த் -ரக்ஷிதா ஷெட்டி ஜோடியை வாழ்த்தினர்.
இந்தநிலையில் தங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதாகவும், மகளுக்கு ‘லீலாதேவி நைனி’ என பெயர் சூட்டி இருப்பதாகவும் ஷர்வானந்த் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார்.
இதைப்பார்த்த ரசிகர்கள் ஷர்வானந்த் – ரக்ஷிதா ஷெட்டி தம்பதியினருக்கு தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
ஷர்வானந்த் தற்போது ஸ்ரீராம் ஆதித்யா இயக்கத்தில் ’மனமே’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்து வருகிறார்.
அடுத்ததாக அபிலாஷ் ரெட்டி என்பவர் இயக்கத்தில் பைக் ரைடராக புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக மாளவிகா நாயர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
புதுச்சேரியில் பந்த் : முக்கிய முடிவெடுத்த தனியார் பள்ளிகள்!
’பம்பரம் சின்னம்… 2 வாரங்களில் முடிவு வேண்டும்’ : உயர்நீதிமன்றம் உத்தரவு!