விஜய்யும் அஜித்தும் இணைந்து நடித்த ராஜாவின் பார்வையிலே திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது.
இரண்டு பெரிய நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கும் கலாச்சாரம் தமிழ் திரை உலகில் தற்போது இல்லை. எம்ஜிஆர் – சிவாஜி, ரஜினி – கமல், விஜய் – அஜித் என காலத்திற்கு ஏற்றவாறு சரிக்கு சமமான இரண்டு நாயகர்கள் இருப்பது வழக்கம்.
ஆரம்பத்தில் பெரிய நடிகர்கள் இணைந்து நடித்திருந்தாலும், ரசிகர்கள் தங்களது நாயகர்கள் தனித்து ஜொலிக்கவேண்டும் என்றே விரும்பியதால் அதை நடிகர்களும் பின்பற்றத் தொடங்கினர்.

தற்போது தமிழ் சினிமாவில் விஜய், அஜித்துக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய்யின் வாரிசும், அஜித்தின் துணிவும் வெளியாக உள்ளது.
2014 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையின் போதுதான் ஜில்லா,வீரம் ஆகிய இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் வெளியானது. அதன் பிறகு மீண்டும் எட்டு வருடங்களுக்கு பிறகு ஒரே நாளில் விஜய் – அஜித் படங்கள் பொங்கல் முன்னிட்டு வெளியாக உள்ளது.
இதனால் இருவரின் ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர். யார் படம் வெற்றி பெறப் போகிறது என்று போட்டி போட்டு சமூக வலைதளங்களில் கருத்துகளையும் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகர் விஜய் மற்றும் அஜித் ஒன்றாக இணைந்து நடித்து 1995 ஆம் ஆண்டு வெளியான ராஜாவின் பார்வையிலே ஜனவரி 6 ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது.
இளையராஜா இசையில் அன்று இளம் நடிகர்களாக களம் கண்டு இன்று சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கக்கூடிய நடிகர்கள் விஜய் – அஜித் இணைந்து நடித்த ஒரே திரைப்படம் இதுவாகும். தற்போது இந்தப் படத்திற்கான முன்பதிவும் தொடங்கியிருக்கிறது.
கலை.ரா
யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வு: ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!
”எங்கிருந்தாலும் வாழ்க” காயத்ரியை வாழ்த்திய அண்ணாமலை