புதுச்சேரியில் பாலியல் வன்கொடுமை செய்து சிறுமி கொலை செய்யப்பட்டதற்கு நீதி கேட்டு நாளை (மார்ச் 8) பந்த் நடைபெற உள்ளதையொட்டி அங்குள்ள பெரும்பாலான தனியார் பள்ளிகள் விடுமுறை அறிவித்து வருகின்றன.
புதுச்சேரியின் சோலைநகர் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி ஆர்த்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தேசிய அளவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் சிறுமி கொலைக்கு நீதி கேட்டு பல்வேறு அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தினர்.
மேலும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடங்கி, முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, தொல் திருமாவளவன், கமல்ஹாசன், விஜய் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்த விவகாரத்தில் விவேகானந்தன் (60 வயது) மற்றும் கருணாஸ் (19 வயது) ஆகியோர் போதையில் இந்த கொடூர செயலில் ஈடுப்பட்டது கண்டறியப்பட்டு தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே உயிரிழந்த சிறுமி ஆர்த்தியின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டு,
பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பாப்பம்மாள் கோயில் மயானத்தில் குடும்ப முறைப்படி அவரது உடல் இன்று அடக்கம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் கொடூர கொலை செய்யப்பட்ட சிறுமியின் கொலைக்கு நீதிக்கேட்டு புதுச்சேரியில் திமுக, அதிமுக, காங்கிரஸ், விசிக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சிறுமியின் உயிரிழப்பால் அங்குள்ள மக்களிடையே கடும் கொந்தளிப்பான சூழ்நிலை நிலவி வரும் நிலையில், புதுச்சேரியில் நாளை முழு அடைப்புக்கு பெரும் ஆதரவு குவிந்து வருகிறது.
மாணவர்கள் பொதுத்தேர்வினை எழுதி வரும் சூழ்நிலையில் பந்த் தேவையற்றது என்று என்.ஆர். காங்கிரஸ் அரசு அறிவித்துவிட்டது. ‘எனினும் அங்குள்ள உள்ள பெரும்பாலான தனியார் பள்ளிகள் நாளை விடுமுறை என அறிவித்துள்ளன.
பள்ளி நிர்வாகங்கள் சார்பில் பெற்றோரை தொடர்பு கொண்டு பந்த் காரணமாக நாளை விடுமுறை என்ற தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
’பம்பரம் சின்னம்… 2 வாரங்களில் முடிவு வேண்டும்’ : உயர்நீதிமன்றம் உத்தரவு!
INDvsENG : சுழலில் சிதறிய இங்கிலாந்து : குல்தீப், அஸ்வின் சாதனை!
‘போர் தொழில்’ இயக்குநரின் ‘நெக்ஸ்ட்’ ஹீரோ இவர்தான்!