ஐ.டி. ரெய்டு: ஒப்பந்ததாரர் வீட்டில் ரூ.2.1 கோடி பறிமுதல்?

தமிழகம்

டாஸ்மாக் லாரி ஒப்பந்ததாரரின் வீட்டில் இன்று (மே 27) 2வது நாளாக நடைபெற்று வரும் வருமானவரி சோதனையில் 2.1  கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழ்நாட்டில் சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் மற்றும் அவருக்கு  நெருக்கமானவர்கள் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

நள்ளிரவிலும் நடைபெற்ற சோதனையைத் தொடர்ந்து துணை ராணுவப்படை வீரர்களின் பாதுகாப்புடன் இன்றும் 2வது நாளாக தொடர்ந்து வருகிறது.

அதன்படி கோவையில் 7 இடங்களிலும், திருச்சி, கரூர், ஈரோடு உள்பட தமிழகம் முழுவதும் பல்வேறு ஒப்பந்ததாரர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. 

அந்தவகையில் ஈரோடு வெண்டலை அடுத்துள்ள சக்தி நகரில் வசித்து வருபவர் சச்சிதானந்தம். டாஸ்மார்க் லாரி ஒப்பந்ததாரரான இவரது வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் 2வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது.

தற்போது அவருடைய வீட்டில் இருந்து பல்வேறு ஆவணங்கள் மற்றும் 2.1 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அவரது மேலும் சில அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்று வருவதால் கூடுதல் ரொக்க பணங்களோ அல்லது ஆவணங்களோ கைப்பற்ற படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிறிஸ்டோபர் ஜெமா

’ஜிகு ஜிகு’ பாடலில் ஸ்டைலாக ஆட்டம் போடும் ஏ.ஆர்.ரகுமான்

மோடி தலைமையில் நிதி ஆயோக்:  ஆந்திரா தவிர  தென்னிந்திய முதல்வர்கள் ஆப்சென்ட்!

+1
0
+1
5
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0

1 thought on “ஐ.டி. ரெய்டு: ஒப்பந்ததாரர் வீட்டில் ரூ.2.1 கோடி பறிமுதல்?

  1. திண்டல் என்பதற்கு பதில் வெண்டலை என்று தப்பு தப்பாக தட்டச்சு செய்ய வேண்டிய அவசியம் என்ன??? இது தான் செய்தி வழங்குவதில் உள்ள தரமா??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *