விடுமுறையை சுகமாகக் கழித்துவிட்டு, திங்கட்கிழமை காலை பரபரப்பில் என்ன செய்யலாம் என்று யோசிப்பவர்களுக்கு இந்த காய்கறி சாலட் பெஸ்ட் சாய்ஸாக அமையும். வேகவைக்காமல் சாப்பிடுவதால் ஊட்டச்சத்துகள் முழுவதுமாகவும் நார்ச்சத்து அதிகமாகவும் கிடைக்கும். நீரிழிவாளர்கள், உடல் பருமன் உள்ளவர்கள்கூட அடிக்கடி எடுத்துக்கொள்ளலாம். மலச்சிக்கல் நீங்கும், உடல் எடை குறையும்.
என்ன தேவை?
பொடியாக நறுக்கிய அல்லது துருவிய கேரட், முள்ளங்கி, வெள்ளரிக் கலவை – ஒரு கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் – 2 டேபிள்ஸ்பூன்
தக்காளி, வெள்ளரி விதை – தலா ஒரு டேபிள்ஸ்பூன்
மிளகு, சீரகத் தூள் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
ஒரு கிண்ணத்தில் காய்கறித் துருவல்களைப் போட்டு, அதனுடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி, மிளகு, சீரகத் தூள், உப்பு போட்டுக் கிளறி, வெள்ளரி விதையைத் தூவிப் பரிமாறலாம்.
சத்யதேவ் லா அகாடமியை துவங்கி வைத்த ஸ்டாலின்