இட ஒதுக்கீடு… மூங்கில் இல்லை என்றால் புல்லாங்குழல் இசைக்க முடியாது: ராகுல்

அரசியல்

நாடாளுமன்ற தேர்தல் இரண்டுகட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், பிரச்சார களம் உச்சகட்டத்தை அடைந்துள்ளது.

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்கள் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை, இந்தியா கூட்டணி மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

அதேபோல இந்தியா கூட்டணி தலைவர்களும் பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியலைமைப்பு சட்டம் இருக்காது என்றெல்லாம் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்தநிலையில், மத்திய பாஜக அரசு பொதுத்துறை நிறுவனங்களின் பணியிடங்களை குறைத்து இட ஒதுக்கீட்டை அபகரித்துவிட்டதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று (மே 2) குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில்,

“பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவதன் மூலம் தலித் மக்கள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீட்டை மத்திய பாஜக அரசு ரகசியமாக பறித்து வருகிறது.

2013-ஆம் ஆண்டு பொதுத்துறையில் 14 லட்சம் பணியிடங்கள் இருந்த நிலையில், 2023-ல் அது 8.4 லட்சமாக குறைந்தது.

BSNL, SAIL, BHEL போன்ற மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களை அழித்ததன் மூலம், 6 லட்சம் பணியிடங்கள் நீக்கப்பட்டன. இவை இட ஒதுக்கீட்டில் முக்கிய அங்கம் வகிக்கும் பணியிடங்களாகும்.

ரயில்வே போன்ற பொதுத்துறை நிறுவனங்களில் காண்ட்ராக்டில் வேலை கொடுத்து, பின்வாசல் வழியாக அனுப்பப்படுபவர்களின் எண்ணிக்கைகளுக்கு கணக்கே இல்லை.

மோடியின் தனியார்மயமாக்கம் கொள்கை என்பது நாட்டில் உள்ள வளங்களை கொள்ளையடிப்பதும், தாழ்த்தப்பட்டவர்களின் இட ஒதுக்கீட்டை பறிப்பதுமாகும்.

காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பொதுத்துறை நிறுவனங்களை வலுப்படுத்துவோம். அதேநேரத்தில் மத்திய அரசில் காலியாக உள்ள 30 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும். ஒவ்வொரு பிரிவினருக்குமான வேலைவாய்ப்பு கதவுகளை திறப்போம்

மூங்கில் இல்லை என்றால் புல்லாங்குழல் இசைக்க முடியாது. அதேபோல, அரசு வேலை இல்லை என்றால் இட ஒதுக்கீடு கிடைக்காது” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வெயிலை விட மோடியின் கொள்கைதான் மக்களை சுட்டெரிக்கிறது! – கார்கே

மறைந்தாலும் மறக்க முடியாத உமா ரமணன் பாடல்கள்!

 

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *