மத்திய பாஜக அரசின் ஒன்பது ஆண்டுகால தோல்வியை மறைப்பதற்காக பொது சிவில் சட்டத்தை கொண்டு வர முயற்சிக்கின்றனர் என்று எஸ்டிபிஐ மாநில தலைவர் நெல்லை முபாரக் குற்றம் சாட்டியுள்ளார்.
பொதுசிவில் சட்டத்திற்கு எதிராக மதுரையில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் எஸ்டிபிஐ மாநில தலைவர் நெல்லை முபாரக், திமுக முன்னாள் அமைச்சர் பொன் முத்துராமலிங்கம், மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் புதூர் பூமிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
பின்னர் எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் செய்தியாளர்களிடம் பேசியபோது, “மத்திய பாஜக அரசு 9 ஆண்டுக்கால தோல்வியை மறைப்பதற்காகவும் மக்களை மதங்களாக பிரிப்பதற்காகவும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த முயற்சி செய்து கொண்டிருக்கிறது .
இந்த முயற்சியை எஸ்டிபிஐ கட்சி வன்மையாக கண்டிக்கிறது. நாட்டின் பன்முகத்தன்மையை சீர்குலைக்க ஒரே நாடு ஒரே சட்டம் ஒரே மக்கள் ஒரே உணவு என்கின்ற ஒரே கலாச்சாரத்தை கொண்டு வருகின்றனர். பொது சிவில் சட்டத்தை மத்திய அரசு கைவிடவில்லை என்றால் ஜனநாயக சக்திகளை திரட்டி போராட்டம் நடத்துவோம்” என்று தெரிவித்தார்.
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கிரைம் திரில்லர் கண்ணிவெடி!
மதுரை மாநாடு: எடப்பாடி தலைமையில் ஆலோசனை கூட்டம்!