சத்யதேவ் லா அகாடமியை துவங்கி வைத்த ஸ்டாலின்

Published On:

| By Selvam

mk stalin open satyadev law academy

அரசு சட்டக்கல்லூரி மாணவர்களின் திறன்களை வளர்ப்பதற்காகவும் வழிகாட்டுவதற்காகவும் ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு முன்னெடுப்பில் நடிகர் சூர்யா, இயக்குநர் ஞானவேல் இணைந்து சத்யதேவ் லா அகாடமியை உருவாக்கியுள்ளனர். இந்த அகாடமியை முதல்வர் ஸ்டாலின் தனது முகாம் அலுவலகத்தில் வைத்து இன்று துவங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு, நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

mk stalin open satyadev law academy

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், “சமூகத்தில் கல்வியும் வேலைவாய்ப்பும் ஒரு சாராருக்கு மட்டுமே சொந்தமல்ல என்று போராடி சமூக நீதி அடிப்படையில் உரிமைகளைப் பெற்றோம். 1961-ஆம் ஆண்டு வழக்கறிஞர் சட்டம் இயற்றப்பட்ட பிறகும், இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்ட பிறகே எளிய மக்களும் சட்டத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். எளிய பின்புலங்களில் இருந்து வரும் அவர்களது திறன்களை வளர்க்க, ஓய்வுபெற்ற நீதியரசர்  சந்துரு அவர்களை இயக்குநராகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள சத்யதேவ் லா அகாடமியைத் தொடங்கி வைத்தேன்.

mk stalin open satyadev law academy

இதில், ஏழை – எளிய மக்களின் கல்விக்காக உள்ளார்ந்த அக்கறையோடு தொடர்ச்சியாகச் செயல்பட்டு வரும் சூர்யா பங்களிப்பை பாராட்டுகிறேன். சட்டத்தொழிலும் மருத்துவத் தொழிலும் மற்ற தொழில்கள் போல் அல்ல. மற்றவை பணி புரிவது; இவை பயிற்சி செய்வது. எனவே, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு இந்த அகாடமியின் மூலம் பயிற்சி அளிக்கக் கேட்டுக் கொண்டுள்ளேன்.

நீதியரசர் சந்துரு அவர்களோடு, ஜெய் பீம் திரைப்படத்திற்கு பிறகும் தொடர்ந்து சமூக அக்கறையோடு செயல்பட்டுவரும் சூர்யா, இயக்குநர் ஞானவேல் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்”என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

பொது சிவில் சட்டம்: மதுரையில் எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம்!

முதல்வருக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம்: அண்ணாமலை எச்சரிக்கை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel