chembarambakkam lake water released

செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறப்பு!

தமிழகம்

chembarambakkam lake water released

காஞ்சிபுரத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளவை எட்ட உள்ளதால் ஏரியிலிருந்து வினாடிக்கு 200 கன அடி உபரி நீர் இன்று (நவம்பர் 28) திறந்து விடப்பட்டுள்ளது.

சென்னைக்கு குடிநீர்‌ வழங்கும்‌ முக்கிய நீர்‌ ஆதாரங்களில்‌ ஒன்றான செம்பரம்பாக்கம்‌ ஏரியானது 25.5 சதுர கி.மீ பரப்பளவில்‌ குன்றத்தூர்‌ வட்டம்‌, காஞ்சிபுரம்‌ மாவட்டத்தில்‌ அமைந்துள்ளது.

ஏரியின்‌ நீர் மட்ட மொத்த உயரம்‌ 24.00 கன அடியாகும்‌. இதன் முழு கொள்ளளவு 3645 மில்லியன்‌ கன அடியாகும்‌.

இன்று நீர்‌ இருப்பு 22.29 அடியாகவும்‌ கொள்ளளவு 3195 மில்லியன்‌ கன அடியாகவும்‌ உள்ளது. செம்பரம்பாக்கம்‌ எரியின்‌ நீர்‌ வரத்து விநாடிக்கு 452 கன அடியாக உள்ளது.

தற்போது ஏரிக்கு வரும்‌ நீர்‌ வரத்தினால்‌  நீர்மட்டம் 22 அடியை எட்டுவதாலும்‌, ஏரியின்‌ நீர் பிடிப்பு பகுதிகளில்‌ அவ்வப்போது, விட்டு விட்டு மழை பெய்து வருவதால்‌ வெள்ளநீர்‌ வரத்து காரணமாக செம்பரம்பாக்கம்‌ ஏரியின்‌ நீர்‌ மட்டம்‌ உயர்ந்து வருகிறது.

ஏற்கனவே ஏரியில்‌ இருந்து விநாடிக்கு 25 கன அடி உபரி நீர்‌ திறக்கப்படும்‌ நிலையில்‌, தற்போது ஏரியின்‌ நீர் பிடிப்பு பகுதிகளில்‌ வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால்‌ நீர்‌ வரத்து விநாடிக்கு 452 கன அடியாக உள்ளதால்‌ முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக,

இன்று காலை 10 மணி அளவில்‌  வெள்ளநீர்‌ போக்கி வழியாக வினாடிக்கு 200 ௧ன அடி குறைந்த அளவே உபரி நீர்‌ திறக்கப்பட உள்ளது.

ஏரிக்கு வரக்கூடிய நீர்வரத்து தொடர்ந்து அதிகப்படியாகும்‌ நிலையில்‌ கூடுதல்‌ உபரிநீர்‌ படிப்படியாக திறக்கப்படும்‌,

எனவே ஏரியிலிருந்து மிகை நீர்‌ வெளியேறும்‌ வாய்க்கால்‌ செல்லும்‌ கிராமங்களான சிறுகளத்தூர்‌, காவனூர்‌, குன்றத்தூர்‌, திருமுடிவாக்கம்‌, வழுதியம்பேடு, திருநீர்மலை மற்றும்‌ அடையாறு ஆற்றின்‌ கரையின்‌ இரு புறமும்‌ உள்ள தாழ்வான பகுதிகளில்‌ வசிப்பவர்களை எச்சரிக்கையாக இருக்குமாறு மாவட்ட ஆட்சியர்‌ தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

செல்வம்

தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

சுரங்க விபத்து: 17-வது நாளாக தொடரும் மீட்பு பணி!

chembarambakkam lake water released

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *