அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில், 18 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த மாடுபிடி வீரர் கார்த்திக்கு நிசான் மேக்னைட் கார் பரிசாக வழங்கப்பட்டது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி மதுரை அவனியாபுரம், பாலமேட்டில் நடைபெற்று முடிந்தது. இந்தநிலையில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (ஜனவரி 17) காலை 7 மணிக்கு துவக்கி வைத்தார்.
இந்த போட்டியில் 1000 காளைகளும், 600 வீரர்களும் பங்கேற்றனர். 10 சுற்றுகளாக விறுவிறுப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியானது, மாலை 6 மணிக்கு நிறைவு பெற்றது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி பரிகளை வழங்கினார்
18 காளைகளை அடக்கிய கருப்பாயூரணி கார்த்திக்கு முதல் பரிசாக நிசான் மேக்னைட் கார் வழங்கப்பட்டது. இவர் கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் முதலிடத்தை பிடித்திருந்தார்.
அதேபோல, 17 காளைகளை அடக்கிய சிவகங்கையைச் சேர்ந்த அபிசித்தருக்கு இரண்டாவது பரிசாக பைக் வழங்கப்பட்டது. இவர் கடந்த 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் முதலிடம் பிடித்தார்.
சிறந்த காளைக்கான பிரிவில் திருச்சி மேலூர் குணாவின் கட்டப்பா காளைக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
விடாமுயற்சி, தங்கலான் பட உரிமையைக் கைப்பற்றிய நெட்ஃபிளிக்ஸ்!
அண்ணாமலை முதல்வராவது நடக்காத விஷயம்: ஜெயக்குமார்