நேற்று (மார்ச் 24) 2024 ஐபிஎல் தொடரின் 5-வது போட்டியில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
முன்னதாக, குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை ட்ரான்ஸ்பர் முறையில் வாங்கிய மும்பை, தனது அணிக்கு கேப்டனாகவும் அறிவித்தது.
அதனால், இந்த 2 அணிகள் மோதும் போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது.
அப்படியான இப்போட்டி, உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றத்து. ipl 2024 gill hardik pandya
முன்னதாக டாஸ் போட ஹர்திக் பாண்டியா மைதானத்திற்கு வந்தபோது, அவருக்கு எதிராக ரசிகர்கள் ஒலி எழுப்பினர். இதைத் தொடர்ந்து, டாஸ் வென்ற அவர் பவுலிங்கை தேர்வு செய்தார்.
இதையடுத்து குஜராத் அணிக்கு துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய விருத்திமான் சகா & கேப்டன் சுப்மன் கில், அந்த அணிக்கு ஒரு நல்ல துவக்கத்தை அளித்தனர்.
சஞ்சு சாம்சன் மிரட்டல் பேட்டிங்… அபார வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ்!
சகா 19 ரன்களும், சுப்மன் கில் 31 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். தொடர்ந்து களமிறங்கிய தமிழ்நாடு வீரர் சாய் சுதர்சன், இந்த பொறுப்பான ஆட்டத்தை தொடர்ந்தார்.
அவர் 45 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அவருக்கு துணையாக, அஸ்மதுல்லா ஓமர்சாய் 17 ரன்கள், டேவிட் மில்லர் 12 ரன்கள், ராகுல் தெவாட்டியா 22 ரன்கள் சேர்க்க, குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 168 ரன்கள் சேர்த்தது.
மும்பை அணிக்காக, பும்ரா 4 ஓவர்களில் வெறும் 14 ரன்கள் மட்டுமே வழங்கி 3 விக்கெட்களை கைப்பற்றினார்.
தொடர்ந்து 169 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணிக்கு, இஷான் கிஷன் ரன் எதுவும் எடுக்காமல் முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
ஆனால், மறுமுனையில் ரோகித் சர்மா தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அவருக்கு இணையாக அதிரடி காட்டிய நமன் திர், 10 பந்துகளில் 20 ரன்கள் விளாசியிருந்தபோது எதிர்பாராத விதமாக ஆட்டமிழந்தார்.
பின் டிவால்ட் பிரேவிஸ் உடன் ஜோடி சேர்ந்த ரோகித் சர்மா, நிதானமாக அணியின் எண்ணிக்கையை உயர்த்தினார்.
ரோகித் சர்மா 43 ரன்களுக்கும், பிரேவிஸ் 46 ரன்களுக்கும் ஆட்டமிழந்தபோதும், 4 ஓவர்களில் 39 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில் மும்பை இருந்தது. ipl 2024 gill hardik pandya
அப்போது மும்பையின் கைவசம் 6 விக்கெட்களும் இருந்தது. இதனால் வழக்கத்திற்கு மாறாக மும்பை அணி முதல் போட்டியில் வென்று விடும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
ஆனால், கடைசி 3 ஓவர்களை வீசிய மோஹித் சர்மா, ஸ்பென்சர் ஜான்சன் மற்றும் உமேஷ் யாதவ், மும்பை அணியின் 5 விக்கெட்களை கைப்பற்றினர்.
இதன் காரணமாக, அந்த அணியால் கடைசி 4 ஓவர்களில் 32 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது.
இதன்மூலம், மும்பை அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, குஜராத் டைட்டன்ஸ் அணி ஒரு ‘த்ரில்’ வெற்றியை பதிவு செய்தது.
அந்த அணிக்காக அஸ்மதுல்லா ஓமர்சாய், மோஹித் சர்மா, ஸ்பென்சர் ஜான்சன் மற்றும் உமேஷ் யாதவ் என 4 வேகப்பந்துவீச்சாளர்களும் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.
இந்த தொடரை வெற்றியுடன் துவங்கிய குஜராத் அணி, தற்போது புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.
தற்போது, 10 அணிகளுமே தலா ஒரு போட்டியை விளையாடி முடித்துள்ள நிலையில், ரன் ரேட் அடிப்படையில் ராஜஸ்தான் அணி முதலிடத்திலும், சென்னை அணி 2-வது இடத்திலும் உள்ளன.
–மகிழ்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சிவகங்கை தொகுதியில நெட்பிளிக்ஸ் சப்ஸ்கிரிப்ஷன் இலவசமா? – அப்டேட் குமாரு
தமிழகத்தில் திமுக அதிமுக இடையே தான் போட்டி: எடப்பாடி
மதிமுக துரைவைகோ வேட்புமனு தாக்கலில் திடீர் குழப்பம்!