Vகிச்சன் கீர்த்தனா: எள் நூடுல்ஸ்!

public

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவுகளில் முக்கியமான உணவு நூடுல்ஸ். இதை வெவ்வேறு வழிகளில், வெவ்வேறு முறைகளில் தயாரிக்க முடியும். நீங்கள் எப்போதாவது எள் நூடுல்ஸை முயற்சி செய்து பார்த்ததுண்டா? வழக்கமான நூடுல்ஸ் போன்று இல்லாமல் மிகவும் வித்தியாசமான மாலை நேர உணவாக எள் நூடுல்ஸைச் செய்யலாம். இதன் செய்முறை மிகவும் எளிதானது. இதில் பயன்படுத்தப்படும் பொருட்கள் மிக எளிதாகவும் கிடைக்கும். எள் குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. இதில் கால்ஷியம் சத்து அதிகம் நிறைந்துள்ளது சுவை நிறைந்ததும்கூட!

பரிமாறும் அளவு – 4 பேர்

தயாரிப்பு நேரம் – 15 நிமிடங்கள்

சமையல் நேரம் – 20 நிமிடங்கள்

**தேவையான பொருட்கள்:**

வேகவைத்த நூடுல்ஸ் – இரண்டரை கப்

பூண்டு – 1 டீஸ்பூன் (நறுக்கியது)

வெள்ளை எள் – 1 டீஸ்பூன்

இஞ்சி – 1 டீஸ்பூன் (நறுக்கியது)

வினிகர் – 1 தேக்கரண்டி

கறுப்பு சோயா சாஸ் – 1 தேக்கரண்டி

நல்லெண்ணெய் – 1 டீஸ்பூன்

வெங்காயத் தாள் – 1 டீஸ்பூன் (நறுக்கியது)

உப்பு – தேவைக்கேற்ப

**செய்முறை:**

எள்ளை மிதமான சூட்டில் குறைந்தது இரண்டு நிமிடங்கள் வறுக்கவும். அதன் பின்னர் அதை ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக்கொள்ளவும் இப்போது, அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றிச் சூடாக்கவும். அதனுடன் இஞ்சி, பூண்டு சேர்த்து நன்கு பொன்னிறமாக வறுக்கவும். அதன் பின்னர் இதனுடன் வேக வைத்த நூடுல்ஸை சேர்க்கவும். அதனுடன் சிறிது உப்பு, கறுப்பு சோயா சாஸ், சிறிது வினிகர் ஆகியவற்றைச் சேர்க்கவும். கலவையை நன்கு கலக்க அவற்றைச் சிறிது புரட்டிவிடவும். பின்னர் நூடுல்ஸ் மீது வறுத்த எள்ளைத் தூவவும். இப்போது, நூடுல்ஸில் எள் நன்கு கலக்கும் வண்ணம் கலவையை மீண்டும் புரட்டிவிடவும். கலவை நன்கு கலந்த பின் அடுப்பை அணைத்துவிடவும்.

நூடுல்ஸைப் பரிமாறும் கிண்ணத்திற்கு மாற்றிவிடவும். நறுக்கப்பட்ட வெங்காயத் தாள் மற்றும் மீதமுள்ள எள்ளை, நூடுல்ஸ் மீது தூவி அலங்கரிக்கவும்.

சுவை மிகுந்த எள் நூடுல்ஸ் தயார்!

**குறிப்பு:**

மேலும் சிறப்பிக்க விரும்பினால் இதனுடன் வேக வைத்த காய்கறிகள், முட்டை, சிக்கன் ஆகியவற்றைச் சேர்க்கலாம்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *