]அதிகரித்துவரும் உருக்கு உற்பத்தி!

public

இந்தியாவின் உருக்கு உற்பத்தி ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இத்துறையில் சர்வதேச அளவில் மிக வேகமாக முன்னேறிச் செல்லும் நாடாக இந்தியா உருவாகி வருகிறது.

நடப்பு நிதியாண்டின் (2017-18) முதல் காலாண்டில் இந்தியாவின் உருக்கு உற்பத்தி 3.8 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் 33.011 மில்லியன் டன் கச்சா உருக்கு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில் கடந்த ஆண்டில் 31.756 மில்லியன் டன் கச்சா உருக்கு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, இந்திய உருக்கு ஆணையத்தின் ஜாய்ன்ட் பிளேண்ட் குழு (ஜே.பி.சி )அளித்துள்ள அறிக்கையில், “நாட்டில் உள்ள முக்கிய உருக்கு ஆலைகளான SAIL, RINL, TSL, Essar, JSWL மற்றும் JSPL ஆகிய ஆலைகளில் மட்டும் இந்த காலாண்டில் 18.795 மில்லியன் டன் கச்சா உருக்கு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. மற்ற ஆலைகளில் 14.216 மில்லியன் டன் கச்சா உருக்கு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் 8.45 மில்லியன் டன் கச்சா உருக்கு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில் கடந்த ஆண்டில் 8.82 மில்லியன் டன் கச்சா உருக்கு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது இந்த ஆண்டு செய்யப்பட்ட உற்பத்தியை விட 4.6 சதவிகிதம் குறைவாகும்.

உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் உருக்குத் தேவை அதிகரித்து வருவதால் இன்னும் பல மடங்கு உருக்கு உற்பத்தியை அதிகரிக்க வேண்டியிருப்பதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். தற்போது சர்வதேச அளவில் அதிக உருக்கு உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியலில் சீனா முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *