tமுத்தலாக்கில் எங்கள் நிலைப்பாடு: அமைச்சர்!

public

முத்தலாக் மசோதா விவகாரத்தில் அதிமுகவின் நிலைப்பாட்டை மாநிலங்களவையில் பிரதிபலிப்போம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

முத்தலாக் மசோதா கொண்டுவரப்பட்டபோது அதனை கடுமையாக எதிர்த்தது அதிமுக. இந்த நிலையில் மக்களவையில் முத்தலாக் மசோதா மீண்டும் கடந்த 25ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டபோது, திடீர் திருப்பமாக அதற்கு அதிமுக உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் ஆதரவு தெரிவித்தார். முத்தலாக் மசோதாவை முதலில் எதிர்த்த அதிமுக, தற்போது ஆதரித்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் 36ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் காணொளி காட்சி மூலமாக இன்று (ஜூலை 27) நடைபெற்றது. அதில் மீன்வளம் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், முத்தலாக் மசோதாவை ரவீந்திரநாத் ஆதரித்தது குறித்த கேள்விக்கு பதிலளித்தார். “மக்களவையில் உறுப்பினர் ஒரு கருத்தை கூறியிருக்கிறார். அதுகுறித்து நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. மாநிலங்களவையில் அதிமுகவின் முடிவை பிரதிபலிப்போம். 2017 ஆம் ஆண்டு முத்தலாக் மசோதா குறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம். அதன்படி எங்களது கருத்து இருக்கும்” என்று தெரிவித்தார்.

**மைத்ரேயனுக்கு பதிலளித்த ஜெயக்குமார்**

மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் முடிந்த பிறகு 25ஆம் தேதி ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய மைத்ரேயன், “மக்களவைத் தேர்தலில் தென்சென்னை தொகுதியில் போட்டியிட விரும்பிய எனக்கு வாய்ப்பு தரவில்லை. மாநிலங்களவை உறுப்பினர் பதவியாவது கிடைக்கும் என எதிர்பார்த்தேன். அதுவும் கிடைக்காதது வருத்தமளிக்கிறது” என்று தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த ஜெயக்குமார், “அரசியலில் ஏற்றத் தாழ்வுகள் இருக்கத்தான் செய்யும். அனைத்தையும் எதிர்கொள்ளும் திறமை இருக்க வேண்டும். 2011ஆம் ஆண்டு எனக்கு சபாநாயகர் பதவியை வழங்கி அழகுபார்த்தார் ஜெயலலிதா. ஆனால் என்னைப் பற்றி போட்டுக் கொடுத்ததால் 2012ஆம் ஆண்டு அப்பதவியை விட்டு விலகினேன். அதற்காக நான் குழந்தை மாதிரி அழுதேனா என்ன? பதவி இல்லை என்பதற்காக கட்சியையோ தனிநபரையோ விமர்சனம் செய்யக் கூடாது. நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் பணியை நாம் தொடர்ந்து செய்ய வேண்டும். 2013,15,16 ஆகிய வருடங்களில் என்னுடைய செயல்பாடுகளை பார்த்துவிட்டு ஜெயலலிதா எனக்கு அமைச்சர் பதவி வழங்கினார். கடவுள் என்ன நினைக்கிறானோ அதுதான் நடக்கும்” என்று தெரிவித்தார்.

**

மேலும் படிக்க

**

**[டிஜிட்டல் திண்ணை: பன்னீர் மகனுக்கு எடப்பாடி போட்ட தடை!](https://minnambalam.com/k/2019/07/26/76)**

**[தமிழகத்தில் இருந்து ஓர் ஆளுநர்!](https://minnambalam.com/k/2019/07/27/48)**

**[ஆபாசப் பேச்சு: கொந்தளிக்கும் நாடாளுமன்றம்!](https://minnambalam.com/k/2019/07/26/58)**

**[முத்தலாக்: எடப்பாடி- ஓ.பன்னீர் முரண்பாடு?](https://minnambalam.com/k/2019/07/26/29)**

**[சசிகலாவின் அருமை இப்போது புரிகிறதா? -அமமுகவின் வீடியோ](https://minnambalam.com/k/2019/07/24/49)**

**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *