rவரம்பு மீறும் ஆறுமுகசாமி ஆணையம்: அப்பல்லோ!

public

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம், விசாரணை வரம்புகளை மீறி செயல்படுவதாக, அப்பல்லோ மருத்துவமனை சென்னை உயர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டியுள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட மருத்துவ சிகிச்சை குறித்து விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையத்துக்குத் தடை விதிக்க கோரி அப்பல்லோ மருத்துவமனை சார்பில் பிப்ரவரி 9ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு முன் இன்று (மார்ச் 4) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது அப்பல்லோ மருத்துவமனை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம், ”ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை வரம்பை மீறி விசாரணை நடத்துகிறது. மருத்துவத்தில் நிபுணத்துவம் பெறாத ஆணையம், நிபுணத்துவம் பற்றி விசாரணை நடத்துவது தவறு” என வாதிட்டார்.

”அரசியல் காரணங்களுக்காக அமைக்கப்பட்டுள்ள ஆணையம், பாரபட்சமாக செயல்படுவதாகவும், 18 ஆலோசகர்கள், 6 எய்ம்ஸ் மருத்துவர்கள், 12 பிற மருத்துவமனைகளின் சிறப்பு மருத்துவர்கள் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தனர். எனவே, போதுமான சிகிச்சை வழங்கப்பட்டதா என ஆணையம், விசாரிப்பது வரம்பு மீறிய செயல்” எனவும் அவர் குற்றம் சாட்டினார்.

ஆணையத்தின் விசாரணை வரம்பில், ”ஜெயலலிதாவை மருத்துவமனைக்கு அழைத்து வரும் முன் தவறான சிகிச்சை வழங்கப்பட்டதா என்பது குறித்தும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்தும் விசாரிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளதே தவிர, மாற்று சிகிச்சை பற்றி விசாரிக்க ஆணையத்துக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை” எனவும் சுட்டிக்காட்டினார்.

லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே காணொளி காட்சி மூலமும், 30 மருத்துவர்கள் நேரிலும் சாட்சியம் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார். அவரது வாதம் நிறைவடையாததால், வழக்கின் விசாரணையை நீதிபதிகள் நாளைக்கு (மார்ச் 5) தள்ளிவைத்தனர்.

கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது, “விசாரணையைத் தடுக்கவே அப்பல்லோ சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஜெ. மரணத்துக்கான காரணம் மட்டுமல்ல, கடைசி நேரத்தில் வழங்கப்பட்ட சிகிச்சை குறித்தும் விசாரிக்க ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது” என்று ஆறுமுகசாமி ஆணையம் கூறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *