qமேலும் ஐந்து பேருக்கு கண்பார்வை பறிபோனது!

public

சேலம், மேட்டூர் அரசு மருத்துவமனையில் 16 பேருக்கு கண் பார்வை பறிபோனது எப்படி? என்பதை கண்டறிய கண் அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்திய மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மேட்டூர் அரசு மருத்துவமனையில் கடந்த 14, 15, 16 தேதிகளில் 23 பேருக்கு கண் புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதில் 16 பேருக்கு பார்வை பறிபோனது. இதையடுத்து அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள், கண்களில் நோய் தொற்று ஏற்பட்டுள்ளதால் தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ளுங்கள் என்று கூறி அனுப்பி வைத்தனர். இதனால் எட்டு பேர் கோவை தனியார் மருத்துவமனையிலும், எட்டு பேர் சேலம் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காகச் சேர்ந்தனர். தகவல் அறிந்த அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் டாக்டர்களிடம் விசாரணை மேற்கொண்டார்கள். மேலும் பாதிப்பு ஏற்படாத ஏழு பேரை சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று பார்வை குறைபாடு ஏற்படாத வகையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் கண் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்ட மருத்துவ உபகரணங்கள், அவர்களுக்கு வழங்கப்பட மருந்துகள் ஆகியவற்றில் நோய் தொற்றை ஏற்படுத்தும் கிருமிகள் உள்ளதா? என கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக அந்த உபகரணங்கள், மருந்துகள் நேற்று சேகரிக்கப்பட்டு ஆய்வுக்காகச் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இதனிடையே மேட்டூர் அரசு மருத்துவமனையில் கண்புரை அறுவை சிகிச்சை செய்தவர்களில் மேலும் ஐந்து பேருக்கு கண்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கண் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய உயர்மட்ட குழுவினர் நேற்று முன்தினம் இரவு, சேலம் வந்து பார்வையை இழந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் விசாரணை நடத்தினர். நேற்றும் இந்த விசாரணை தொடர்ந்தது. பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆகும் மருத்துவ செலவுகள் அனைத்தையும் கொடுக்க குழுவினர் நடவடிக்கை எடுத்தனர். பின்னர், கோவை சென்று தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் விசாரணை செய்தனர்.

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *