Qசர்ச்சை: முதல்வருக்கு முத்தம்

public

�கர்நாடகாவில் சமீபத்தில் கிராமப் பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்றது. இதில், வெற்றி பெற்ற காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு முதல்வர் சித்தராமையா தலைமையில் பெங்களூருவில் உள்ள அரண்மனை திடலில் நேற்று பாராட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் சித்தராமையாவின் அருகில் நின்று புகைப்படம் எடுத்து கொண்டனர். அப்போது, சித்தராமையா அருகில் நின்றிருந்த பெண் கவுன்சிலர் கிரிஜா, திடீரென்று முதல்வர் சித்தராமையாவின் கன்னத்தில் முத்தமிட்டார். இதை எதிர்பாராத சித்தராமையா, கிரிஜாவை ஸ்பரிசத்துடன் தட்டிக் கொடுத்தார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த சித்தராமையா, “அந்தப் பெண் என் மகள் மாதிரி” என்றார். கவுன்சிலர் கிரிஜா இதுபற்றி கூறும்போது, “முதல்வர் மீது எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த அனைவருக்கும் உயர்வான அபிப்ராயம் உள்ளது. நான் எப்போதுமே அவரை அப்பா என்றுதான் அழைப்பேன். அவரை வெகு நெருக்கமாகப் பார்த்த சந்தோஷத்தில் சற்று உணர்ச்சிவசப்பட்டு அவரது கன்னத்தில் முத்தமிட்டுவிட்டேன்” என்றார்.

திருமணமானவரான கிரிஜா, சித்தராமையாவின் சட்டமன்றத் தொகுதியான வருணா பகுதியைச் சேர்ந்த பெண் கவுன்சிலர் என்பது குறிப்பிடத்தக்கது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *