nஸ்டிரைக்: பல்கலைக்கழகத் தேர்வுகள் ரத்து!

public

தமிழக அரசுப் போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தேர்வுகள் இன்று (ஜனவரி 5) ரத்து செய்யப்பட்டுள்ளன.

தமிழக அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு 3 ஆண்டுகளுக்கொரு முறை ஊதிய ஒப்பந்தம் போடப்படுகிறது. தற்போது 12ஆவது ஊதிய ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டுவருகிறது. இந்த ஒப்பந்தம் 2016 ஆகஸ்ட் மாதத்துடன் முடிந்தது. 2016 செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 13ஆவது ஊதிய ஒப்பந்தத்தை அமல்படுத்தியிருக்க வேண்டும். நிதி நெருக்கடி காரணமாகத் தமிழக அரசு அதை அமல்படுத்தவில்லை. இது தொடர்பாக அமைச்சர் விஜய பாஸ்கர் தலைமையில் நேற்று பேச்சுவார்த்தை தொடங்கியது. போக்குவரத்து ஊழியர்கள் 2.57 காரணி ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால் அரசு சார்பில் 2.44 காரணி ஊதிய உயர்வுதான் வழங்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதிருப்தி அடைந்த போக்குவரத்து ஊழியர்கள் நேற்றிரவு (ஜனவரி 4) முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ஊதிய நிலுவைத்தொகை, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை, காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர். இதனால், தமிழகம் முழுவதும் போக்குவரத்து முடங்கியுள்ளது. பேருந்துகள் ஓடாததால் மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நெல்லையிலும் அரசுப் பேருந்துகள் மிகக் குறைந்த அளவிலேயே இயங்கிவருகின்றன. இதனால் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இன்றும், நாளையும் நடக்கவிருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பதிவாளர் பெ.கோவிந்தராஜு, “போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் மாணவர்கள் பள்ளி, கல்லூரிக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இன்றும் நாளையும் நடக்கவிருந்த எம்.பில் மற்றும் தனித்தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுகின்றன. தேர்வு தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *