bஇலங்கை: நீதிபதி நியமனத்தில் சர்ச்சை!

public

இலங்கை நாடாளுமன்றக் கலைப்பு வழக்கை விசாரிக்கும் ஏழு நீதிபதிகள் கொண்ட முழு பெஞ்ச்சை நேற்று முன் தினம் (நவம்பர் 26 ஆம் தேதி) அந்நாட்டு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி நளின் பெரைரா அறிவித்தார். அதில் ஒரு நீதிபதியின் நியமனம் இப்போது சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது.

நாடாளுமன்றக் கலைப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஏழு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச்சில் தலைமை நீதிபதி நளின் பெரைரா, நீதிபதிகள் புவனேகா அலுவிரே, சிஸ்ரா ஜே.டி அப்ரிவ், பிரியந்தா ஜெயவர்தன, பிரசன்ன ஜெயவர்தன, விஜித் கே. மலகோடா, முருடு ஃபெர்னாண்டோ ஆகிய ஏழு நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தலைமை நீதிபதி நளின் பெரைரா, நீதிபதிகள் பிரியந்தா ஜெயவர்தன, பிரசன்னா ஜெயவர்தன ஆகிய மூன்று பேர் இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்து இடைக்காலத் தடை விதித்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

இந்த ஏழு பேரில் நீதிபதி விஜித் கே.மலகோடாவின் நியமனத்தை எதிர்த்து அந்நாட்டில் கேள்விகள் எழுந்துள்ளன என்று இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சர்ச்சைக்கு என்ன காரணம்?

“இந்த வழக்கை விசாரிக்க இருக்கும் நீதிபதி விஜித் கே.மல்கோடா 2014 ஆம் ஆண்டில் கூடுதல் சொலிசிடர் ஜெனரலாக இருந்தவர். அப்போது விஜித் மலகோடாவை மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக நியமனம் செய்ததே அப்போதைய இலங்கை அதிபர் ராஜபக்‌ஷேதான்.

மேலும், இவரது மனைவி சம்பிகா மலகோடாவுக்கு அதிபர் சிறிசேனா கடந்த அக்டோபர் 25 ஆம் தேதி பதவி உயர்வு அளித்து உத்தரவிட்டிருக்கிறார். மறுநாள் அக்டோபர் 26 ஆம் தேதிதான் ரனிலுக்கு பதில் ராஜபக்‌ஷேவை பிரதமராக நியமித்தார் சிறிசேனா.

இலங்கை அரசின் Policy and Public Advocacy எனப்படும் அமைப்பின் செயல் இயக்குனராக இருந்த சம்பிகா மலகோடாவுக்கு, இலங்கை அரசின் முதலீட்டு வாரியத்தின் டைரக்டர் ஜெனரல் ஆக பதவி உயர்வு அளித்திருக்கிறார் அதிபர் சிறிசேனா” என்று இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.

ராஜபக்‌ஷேவால் நீதிபதியாக நியமிக்கப்பட்டவரும், பதவி உயர்வு அளிக்கப்பட்ட அதிகாரியின் கணவருமான விஜித் மலகோடா இப்போது சிறிசேனாவின் முடிவுக்கு எதிரான வழக்கை விசாரிக்க இருப்பதால் அது சரியாக இருக்காது என்று இலங்கை சட்ட வட்டாரத்தில் கருத்துகள் எழுந்துள்ளன.

**நாடாளுமன்றத்தைப் புறக்கணித்த ‘அரசு’**

இலங்கை நாடாளுமன்றம் நேற்று (நவம்பர் 27) கூடியபோது ராஜபக்‌ஷே அணியினர் ஒட்டுமொத்தமாக புறக்கணித்துவிட்டனர்.

ஏற்கனவே சபாநாயகர் கரு ஜெயசூர்யா அறிவித்திருந்ததை ஒட்டி நேற்று மதியம் 1 மணிக்கு நாடாளுமன்றம் கூடியது. காலரி எனப்படும் பார்வையாளர் மாடங்களில் விருந்தினர்களுக்கு நேற்று அனுமதி மறுக்கப்பட்டது. ஊடகவியலாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

நாடாளுமன்றம் தொடங்கிய நிலையில் வளாகம் வரைக்கும் வந்த ராஜபக்‌ஷே ஆதரவு எம்.பி.க்கள் யாரும் மன்றத்துக்குள் செல்லவில்லை. அவர்கள் மன்ற வளாகத்திலேயே தனியாக ஊடக நிறுவனங்களுக்கு பேட்டியளித்தனர். அதில், “சபாநாயகர் கரு ஜெயசூர்யா ஒரு சார்பாக நடந்துகொள்கிறார். இதுவரை அவர் நடத்திய கூட்டங்களில் ஒரு சார்புத் தன்மையே வெளிப்பட்டிருக்கிறது.எனவே நாங்கள் நாடாளுமன்றத்தைப் புறக்கணிக்கிறோம்” என்று கூறினர். மேலும், “அவைக் குறிப்பேட்டில் சபாநாயகர் உச்சரிக்காத வார்த்தைகள் சிலவும் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இதைக் கடுமையாக கண்டிக்கிறோம்” என்றும் ராஜபக்‌ஷே ஆதரவு எம்.பி.க்கள் தெரிவித்தனர்.

ஆளுங்கட்சி என்று சொல்லப்படும் ராஜபக்‌ஷே அணியினர் நாடாளுமன்றத்தை ஒட்டுமொத்தமாக புறக்கணித்தததால் ‘ட்ரஷரி சைடு’ எனப்படும் ஆளுந்தரப்பு இருக்கைகள் காலியாகவே இருந்தன. சில அலுவல்களுக்குப் பிறகு நாடாளுமன்றம் 30 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *