_பிரியா வாரியர்: கோடிகளில் வாய்ப்பு!

public

இணையதளத்தின் பலம் என்னவென்பதும், அதை எப்படியெல்லாம் நன்மைக்காகப் பயன்படுத்தலாம் என்றும் மிகவும் நிதானமாக நிரூபித்திருப்பவர் ‘ஒரு அதார் லவ்’ படத்தின் இயகுநர் ஓமர் லூலு. முதல்கட்டப் படப்பிடிப்பு முடிவதற்கு முன்பே ‘மானிக்ய மலராய போவை’ பாடலை ரிலீஸ் செய்யலாம் என்ற ஐடியாவைக் கொடுத்தவர் அவர்தான். ஓமர் மீது கொண்டிருந்த நம்பிக்கையினால், ‘ஒரு அதார் லவ்’ படத்தின் தயாரிப்பாளர் ஊசிபச்சன் வலக்குழி சம்மதம் தெரிவித்ததும் வெளியான இந்தப்பாடல் சம்பாதித்தது புகழ் மட்டுமல்ல, பணமும்தான்.

ஒரு அதார் லவ் திரைப்படத்தில் இரண்டு கட்டப் படப்பிடிப்புகள் மீதமிருப்பது தெரிந்த தயாரிப்பாளர்கள் பலர் போட்டிபோட்டுக்கொண்டு இந்தப் படத்துக்கு பணம் கொடுக்க முன்வந்திருக்கின்றனர். அத்துடன் பாலிவுட்டில் ஷாருக் கான் உள்ளிட்ட பலரது கவனத்தை அந்தப் பாடலும், பிரியாவும் கவர்ந்திருக்கின்றனர்.

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்தப் படத்தை ரீமேக் செய்வதற்கான உரிமையை வாங்குவதற்கு ஊசுபச்சனைத் தேடி, பல தயாரிப்பாளர்கள் வந்திருக்கின்றனர். மிகப் பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் பல கோடிகளை வாரி இறைக்கத் தயார். ஆனால் பெரும்பாலான நிறுவனங்கள் பிரியா வாரியரின் கால்ஷீட்டையும் சேர்த்து வாங்கிக்கொடுத்தால், ஊசுபச்சன் கேட்கும் விலையைக் கொடுப்பதாகத் தெரிவித்திருக்கின்றனர். எனவே, ‘ஒரு அதார் லவ்’ படத்தின் ஷூட்டிங்க் முடிந்ததும் பிரியா வாரியர் எந்தத் திரையுலகத்துக்கு வருவார் என்பது தெரியவரும்.

பிரியா வாரியருக்கு முன்பு இதேபோல அவசர கதியில் கொண்டுவரப்பட்ட படங்களின் கதி அவ்வளவு நல்லதாக இல்லையென்பது குறிப்பிடவேண்டிய ஒன்று. பிரேமம் திரைப்படத்தைத் தெலுங்கில் கொண்டுபோனபோது மிகப் பெரிய தோல்வியை அப்படம் சந்தித்தது. அதேபோல ‘பெங்களூர் டேஸ்’ படத்தைத் தமிழில் பெங்களூர் நாட்கள் என எடுத்தபோதும், ரசிகர்களிடையே இருந்த எதிர்பார்ப்பை அது நிறைவேற்றவில்லை.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *