_அன்வர் ராஜா மீது தாக்குதல் முயற்சி!

public

அரவக்குறிச்சியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த எம்.பி அன்வர் ராஜா கார் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரவக்குறிச்சி இடைத் தேர்தலில் அதிமுக சார்பாக செந்தில் நாதன் போட்டியிடும் நிலையில், தொகுதியில் இஸ்லாமியர்கள் நிறைந்த பகுதியான பள்ளப்பட்டிக்கு ராமநாதபுரம் மக்களவை உறுப்பினர் அன்வர் ராஜா பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் இறுதி நாளான இன்று (மே 17) மாலை பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த அன்வர் ராஜாவின் கார் மீது தாக்குதல் நடந்துள்ளது.

இதுதொடர்பாக உள்ளூர் அதிமுகவினரிடம் பேசியபோது, “எங்கள் வேட்பாளர் செந்தில் நாதனுக்கு ஆதரவாக அன்வர் ராஜா தலைமையில் நாங்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தோம். இன்று மாலை சரியாக 4.45 மணிக்கு மண்மாரி பெட்ரோல் பங்க் அருகே தேர்தல் பொறுப்பாளர் அன்வர் ராஜா கார் வந்தபோது, அங்கு அமமுக கொடியுடன் திரளாக நின்றிருந்தவர்கள் காரை சூழ்ந்துகொண்டு திடீரென அன்வர் ராஜாவுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். ஒருகட்டத்தில் கைகளில் வைத்திருந்த கொடிக்கம்புகளுடன் காரின் பேனட்டுகளை தட்டத் தொடங்கினர்.

இதனைப் பார்த்த அன்வர் ராஜாவின் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். சுமார் 15 நிமிடம் வரை இந்த சம்பவம் நீடித்தது. சம்பவத்தின்போது அன்வர் ராஜாவும் கார் உள்ளே இருந்தார். அதிர்ஷ்டவசமாக அவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை” என்று தெரிவித்தனர்.

இதுதொடர்பாக அதிமுக நகரச் செயலாளர் அபுதாகீர், அரவக்குறிச்சி டிஎஸ்பியிடம் புகார் அளித்துள்ளார். அன்வர் ராஜாவை தாக்க முயற்சித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கூறியுள்ள அவர், தாக்குதல் காட்சிகள் பதிவாகி இருக்கும் என்பதால் பெட்ரோல் பங்கிலுள்ள சிசிடிவி கேமராவையும் ஆராய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக தேர்தல் அதிகாரியிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

.

.

**

மேலும் படிக்க

**

.

**

[தினகரனுக்கு எடப்பாடி சொன்ன செய்தி!](https://minnambalam.com/k/2019/05/17/27)

**

.

**

[டிஜிட்டல் திண்ணை: சந்திரபாபு நாயுடு -துரைமுருகன் சந்திப்பு; ஸ்டாலின் நடத்திய விசாரணை!](https://minnambalam.com/k/2019/05/16/93)

**

.

**

[ரித்தீஷ் மனைவி மீது புகார்!](https://minnambalam.com/k/2019/05/17/51)

**

.

**

[ரசிகர்களை ஏமாற்றிய மிஸ்டர் லோக்கல்!](https://minnambalam.com/k/2019/05/16/70)

**

.

**

[இடைத்தேர்தல்: கடைசி கட்ட கரன்சி நிலவரம்!](https://minnambalam.com/k/2019/05/17/34)

**

.

**

[இந்தியன் 2 ஷங்கரின் அடுத்த பிளான்!](https://minnambalam.com/k/2019/05/15/45)

**

.

.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *