சீமராஜா படத்திற்கு பின் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மிஸ்டர் லோக்கல் திரைப்படம் நாளை (மே 17) வெளியாகவுள்ளது. வேலைக்காரன் படத்திற்கு பின் சிவகார்த்திகேயனுடன் நயன்தாரா மீண்டும் இப்படத்தில் ஜோடியாக நடித்துள்ளார். இப்படத்தை எம்.ராஜேஷ் இயக்கியுள்ளார்.
ராஜேஷ் இயக்கத்தில் கடைசியாக வெளியான வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெறவில்லை. அதனால் இப்படத்தை அவர் மிகவும் கவனமாக கையாண்டிருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தின் ப்ரோமோக்கள்தான் தற்போது யூட்யூபில் டிரெண்டிங்கில் உள்ளன. சிவகார்த்திகேயன், யோகி பாபு, சதிஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் சற்று அதிகமாகவே உள்ளது.
இந்நிலையில் இப்படத்திற்கு அதிகாலை காட்சிகள் கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்திற்கு ஆளாகியுள்ளனர். ஏற்கெனவே சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான சீமராஜா படத்திற்கும் அதிகாலை காட்சிகள் திரையிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
.
.
மேலும் படிக்க
.
ஓட்டப்பிடாரம்: வீட்டுக்கு வீடு அதிமுகவின் டெலிவரி அடையாளம்!
.
இந்தியன் 2 ஷங்கரின் அடுத்த பிளான்!
.
போலீசார் மிரட்டல்: பைனான்ஸ் அதிபர் தற்கொலை!
.
டிஜிட்டல் திண்ணை: அள்ளிவீசும் அதிமுக, அமமுக; கிள்ளிக் கொடுக்கும் திமுக
.
அஜித் 60ல் இணையும் இளம் இசையமைப்பாளர்!
.
.