மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 15 ஜன 2021

இந்தியன் 2 ஷங்கரின் அடுத்த பிளான்!

இந்தியன் 2 ஷங்கரின் அடுத்த பிளான்!

தமிழ் சினிமாவின் கிளாஸிக்காக கொண்டாடப்படும் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் கைவிடப்பட்டது என செய்திகள் வெளியாகி வரும் நிலையில், இயக்குநர் ஷங்கர் இந்தியன் 2 படத்தை முன்னெடுக்க புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் கமல்ஹாசன், காஜல் அகர்வால் நடிக்க பிரம்மாண்டமாக உருவாகயிருந்தது ஷங்கரின் இந்தியன் பார்ட் 2. இதன் முதல் கட்ட படப்பிடிப்பு சிறிது நாட்களே நடைபெற்ற நிலையில் நடிகரும் மக்கள் நீதி மன்ற கட்சித் தலைவருமான கமல்ஹாசன், மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் கவனம் செலுத்த தொடங்கினார். அதனால் அவரது கால்ஷீட் கிடைக்காமல் இந்த படத்தின் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டது.

அதே சமயம் அதிக பட்ஜெட் மற்றும் கமல்ஹாசனின் கால்ஷீட் போன்ற காரணங்களால் லைக்கா நிறுவனம் தயாரிப்பிலிருந்து பின் வாங்கி விட்டதாக செய்திகள் வெளியாகின. ஷங்கர் அடுத்த படம் இயக்கவுள்ளார், இந்தியன் 2 கைவிடப்பட்டது என வதந்திகள் பரவத் தொடங்கின.

இந்நிலையில், இந்தியன் 2 படத்தின் முழு திரைக்கதை மற்றும் தகவல்கள் அடங்கிய ஒரு புத்தகத்தை ஷங்கர் தயாரித்துள்ளார். இந்த புத்தகத்தில் படத்தின் காட்சி அமைப்புகள், தேவைப்படும் பட்ஜெட் என அனைத்து தகவல்களும் காட்சி ரீதியான விளக்கத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக ஹாலிவுட்டில் மட்டுமே பின்பற்றப்படும் இந்த நடைமுறையை, ஷங்கர் இந்தியன் 2வின் பட்ஜெட் மற்றும் உழைப்பை கருதி முன் தயாரிப்புகளுடன் திட்டமிட்டுள்ளார். மெகா பட்ஜெட் என்பதால் இந்த புத்தகத்தை ரிலையன்ஸ், சன் பிக்சர்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களிடமும் ஷங்கர் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவர் அத்தயாரிப்பு நிறுவனங்களின் பதிலுக்காக காத்திருப்பதாகவும் திரை வட்டாரங்கள் கூறுகின்றன.

.

.

மேலும் படிக்க

.

எடப்பாடியை அகற்ற பரோலில் வரும் சசிகலா

.

ரீபண்ட் தொகை: வருமான வரித் துறை எச்சரிக்கை!

.

சந்திரபாபு நாயுடுவுடன் துரைமுருகன் சந்திப்பு!

.

தேவராட்டம் கொடுத்த லாபம்!

.

திமுக பேசியது உண்மைதான்: தமிழிசை

.

.

புதன், 15 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon