9சீமராஜா உருவான விதம்!

public

சிவகார்த்திகேயன், சமந்தா இணைந்து நடித்துள்ள சீமராஜா படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது.

பொன்ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள சீமராஜா படத்தின் டீசர், ட்ரெய்லர் பாடல்கள் ஏற்கெனவே வெளியாகி கவனம் பெற்றன. தற்போது ‘பராக் பராக்’ என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் பாடலின் வரிகள் மட்டுமல்லாமல் படம் உருவான விதத்தை விளக்கும்படியான காட்சிகள் அமைந்துள்ளன.

முதல் இரு படங்களில் மதுரையை மையமாக வைத்து திரைக்கதை அமைத்த பொன்ராம் இந்தப் படத்தில் பாபநாசம் பகுதியைக் கையிலெடுத்துள்ளார். சிங்கம்பட்டி ஜமீனாக சிவகார்த்திகேயன் வலம் வருகிறார்.

*“பராக் பராக்*

*எட்டூரு எட்டும்படி கொண்டாடா வேட்டு வெடி*

*திக்கு தெறிக்கும்படி மக்கா நீ நாட்டை பிடி*

*வருது வருது வளரிப்படை*

*அளறி ஒளறி பதறி எதிரி எகிறி விட*

*வெட்டருவா வேலுக்கம்பை மேல தூக்கி பிடிடா*

*முட்டியையும் பேர்த்திடவே ஓட ஓட அடிடா”*

என்ற யுகபாரதி வரிகளுக்கு இமான் இசையமைத்துள்ளார். பெரும்பாலான காட்சிகள் தென்காசிப் பகுதிகளில் படமாக்கப்பட்ட நிலையில் அவை உருவான விதத்தை இந்த வீடியோவில் இணைத்துள்ளனர்.

சூரி, சிம்ரன், நெப்போலியன் என நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள இந்தப் படம் செப்டம்பர் 13ஆம் தேதி வெளியாக உள்ளது.

[சீமராஜா மேக்கிங் வீடியோ](https://www.youtube.com/watch?v=8hdJoKqXJhs)�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *