புதிய பாம்பன் பாலம்: இந்தியன் ரயில்வே!

public

இந்திய ரயில்வே, தமிழகத்தில் 1964ஆம் ஆண்டு சுனாமியால் அழிந்து போன ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி ரயில் இணைப்பை மீண்டும் உருவாக்கி புதிய பாம்பன் பாலத்தை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்த பாலத்தை அமைக்கும் பணிக்கு 700 கோடி ரூபாய்க்கு மேல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக இந்தியன் ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுகுறித்து இந்தியன் ரயில்வே வெளியிட்ட அறிக்கையில், “இந்த புதிய பாம்பன் பாலம் தெற்கு ரயில்வேயின் வரலாற்றில் ஒரு மைல் கல்லாக விளங்கும். இந்த புதிய திட்டத்தின் கீழ், தரையிலிருந்து 13 மீட்டர் உயரத்தில், 18 கிலோமீட்டர் நீளத்திற்கு பாதை அமைக்கப்படும். கடந்த 1964 டிசம்பர் மாதம் வரை, தனுஷ்கோடி ஒரு பிரபலமான ரயில் நிலையமாக இருந்தது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனுஷ்கோடி ரயில் நிலையம் இலங்கையில் உள்ள சிலோனுக்கும் இந்தியாவில் உள்ள மண்டபத்திற்கும் இடையே ஒரு முக்கிய தொடர்பு புள்ளியாக இருந்தது. அப்போது ரயில் அஞ்சல் சேவைகள் ‘ரயில் படகு அஞ்சல்’ என்ற பெயரில் இயக்கப்பட்டது. 1964ஆம் ஆண்டு சுனாமியின் போது, இந்த பாலம் அழிந்தது. அப்போது ரயில் ஊழியர்களுடன் 1,800 பேர் உயிரிழந்தனர். அந்த சுனாமியின் அலைகள் முழு தனுஷ்கோடி நகரத்தையே மூழ்கடித்தது. இந்தப் பேரழிவைத் தொடர்ந்து, சென்னை அரசு தனுஷ்கோடியை பேய் நகரமாகவும், வாழத் தகுதியற்றதாகவும் அறிவித்தது. இப்போது ஒரு சில மீனவர்கள் மட்டுமே வாழ்கின்றனர்.

அதன்பிறகு, தனுஷ்கோடியை ரயில் இணைப்பில் மீண்டும் சேர்ப்பதில் கவனம் செலுத்தப்படவில்லை. 64 வருடங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் இந்திய ரயில்வே இதனை கையிலெடுத்திருப்பது பாராட்டுக்குரியது.

.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *