nதடுப்பூசிக்கு பயந்து மரத்தில் ஏறிய நபர்!

public

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. புதிய திரிபான ஒமிக்ரான் சமூக பரவலாக மாறியதையடுத்து, கொரோனா தடுப்பூசியின் இரண்டு தவணையை செலுத்தியவர்களுக்கு பூஸ்டர் டோஸ் போடுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் இன்னும் சிலர் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக் கொள்ளாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். குறிப்பாக கிராமப்புறங்களில் தடுப்பூசி செலுத்த பயந்துக் கொண்டு மக்கள் ஓடி ஒளிகின்றனர்.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தடுப்பூசி செலுத்த வந்தவர்களை மூதாட்டி ஒருவர் சாமியாடி துரத்திய சம்பவம் வைரலான நிலையில், தற்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது.

Vaccine hesitancy at its peak!

“I will not take the vaccine, you can’t get me”,says a 40 year old man after climbing a tree @ Puducherry when the health dept. workers insisted him to take the #COVID19 jab.#vaccination#CovidIndia pic.twitter.com/1a8B5MdZb1

— Sanjeevee sadagopan (@sanjusadagopan) December 28, 2021

புதுச்சேரியில் கோனேரிகுப்பம் கிராமத்திற்கு சுகாதார ஊழியர்கள் தடுப்பூசி செலுத்துவதற்காக சென்றுள்ளனர். அப்போது தடுப்பூசி போட்டுக் கொள்ளாத ஒருவர் சுகாதார ஊழியரை பார்த்தவுடன், கையில் அரிவாள் ஒன்றை எடுத்துக் கொண்டு அருகில் இருந்த மரத்தின் மீது ஏறிக் கொண்டு, தனக்கு மரம் வெட்டும் வேலை இருப்பதாக கூறியுள்ளார்.

அவரிடம் தடுப்பூசி செலுத்த வேண்டும், கீழே இறங்கி வாருங்கள் என்று கூறிய போதும், நான் தடுப்பூசி செலுத்திக் கொள்ளமாட்டேன். வேண்டுமென்றால் நீங்கள் மேலே வந்து ஊசி போடுங்கள் என்று கூறி போக்கு காட்டியுள்ளார்.

பலமுறை எடுத்துக் கூறியும் அவர் கேட்காததால், வேறு வழியின்று ஊழியர் அங்கிருந்து சென்றார். இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தடுப்பூசிக்கு பயந்து மக்கள் மரங்களில் ஏறிக் கொள்வது புதிது கிடையாது. கோவையை அடுத்த சாவடிவயல் அருகே சர்க்கார்போரத்திபதி என்ற மலைவாழ் கிராமத்துக்கு தடுப்பூசி செலுத்த சுகாதார ஊழியர்கள் சென்றபோது அக்கிராம மக்கள் ஆளுக்கொரு திசைக்கு ஓடி ஒளிந்து கொண்டனர். சிலர் மரங்களில் ஏறிக் கொண்டனர்.

**-வினிதா**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *