திருப்பதி குடை ஊர்வலம் ரத்து!

public

கொரோனா ஊரடங்கு காரணமாக ஆண்டுதோறும் நடைபெறும் திருப்பதி திருக்குடை ஆன்மிக ஊர்வலம் இந்த ஆண்டு தவிர்க்கப்படுகிறது என்று இந்து தர்மார்த்த சமிதியின் அறங்காவலர் ஆர்.ஆர். கோபால்ஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருக்கிறார்.

தமிழக பக்தர்கள் சார்பில் பல நூற்றாண்டு பாரம்பரியமாக, திருப்பதி திருக்குடைகள் திருமலையில் சமர்ப்பிக்கப்படுகின்றன. இந்து தர்மார்த்த சமிதி வழங்கும் திருக்குடைகளை ஆண்டுதோறும் 20 லட்சம் பக்தர்கள் தரிசித்து வருகின்றனர்.

வரும் 10ஆம் தேதி, தமிழக பக்தர்கள் சார்பாக, திருப்பதி பிரமோற்சவத்தின்போது, திருமலையில் எழுந்தருளியிருக்கும் ஏழுமலையானுக்கு திருக்குடைகள் சமர்ப்பிக்கப்படுகின்றன. கொரோனா வைரஸ் பரவல் தடுக்கும் நோக்கத்தில் ஒன்றிய, மாநில அரசுகள் பெரிய ஊர்வலங்கள், மக்கள் கூடும் நிகழ்ச்சிகளுக்குக் கட்டுப்பாடு விதித்திருப்பதால், திருப்பதி திருக்குடை ஆன்மிக ஊர்வலம் இந்த ஆண்டு தவிர்க்கப்படுகிறது.

நேற்று (அக்டோபர் 3) சென்னை பட்டாளம் ஆஞ்சநேயர் கோயிலில் பக்தர்கள் இன்றி திருக்குடைகளுக்கு யாக பூஜைகள் நடைபெற்றன. நாளை (அக்டோபர் 5) பூக்கடை சென்ன கேசவ பெருமாள் கோயிலில் திருக்குடைகளுக்குச் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. 9ஆம் தேதி திருச்சானூர் தாயார் கோயிலில் இரண்டு திருக்குடைகளும், 10ஆம் தேதி திருமலை ஏழுமலையான் கோயிலில் ஒன்பது திருக்குடைகளும் சமர்ப்பிக்கப்பட உள்ளன.

அரசின் கட்டுப்பாடு காரணமாக, மேற்கண்ட திருக்குடை ஆன்மிக நிகழ்ச்சிகளில் பங்கேற்க, திருக்குடை கமிட்டியினருக்கும், பக்தர்களுக்கும் அனுமதி இல்லை. இந்த ஆண்டு, திருக்குடை வைபவங்களை பக்தர்கள் வீட்டில் இருந்தே தரிசிக்க வசதியாக, திருக்குடை சிறப்பு பூஜைகள், TirupatiKudai என்ற முக நூல் பக்கத்திலும் RR.GOPALJEE என்ற யூடியூப் தளத்திலும் நேரலையாக ஒளிபரப்பாக உள்ளது.

தங்கள் இருப்பிடங்களில் இருந்தபடியே பக்தர்கள் திருக்குடை பூஜை மற்றும் சிறப்பு பூஜைகளை தரிசிக்கலாம். மேலும், 9ஆம் தேதி திருப்பதி திருக்குடை கமிட்டியினர், தமிழக பக்தர்கள், தங்கள் பகுதியில், அரசின் ஊரடங்கு விதிமுறைகளைப் பின்பற்றி, ஆண்டுதோறும் நடைபெறுவது போன்று, ஏழுமலையான் படத்தை வைத்து அலங்கரித்து பூஜைகள் செய்ய வேண்டும்.

இந்து தர்மார்த்த சமிதியால் நடத்தப்படும் திருப்பதி திருக்குடை ஆன்மிக நிகழ்வுக்கு, நன்கொடைகள், உண்டியல் வசூல் கிடையாது. மேலும் விவரங்களுக்கு 73730 99562, 73730 99545 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

**-ராஜ்**

.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *