~வேலூர்: தேர்தல் செலவின கண்காணிப்பாளர் நியமனம்!

public

வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் செலவின சிறப்புக் கண்காணிப்பாளராக ஓய்வுபெற்ற வருமான வரித் துறை பொது இயக்குநர் முரளிகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

மக்களவைத் தேர்தலின்போது வேலூர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக அத்தொகுதிக்கு மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஆகஸ்ட் 5ஆம் தேதியன்று வேலூர் தொகுதிக்கு தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் ஜூலை 11ஆம் தேதி முதல் தொடங்கியது. வேட்பு மனுத் தாக்கலுக்கு ஜூலை 18ஆம் தேதி கடைசி நாளாகும். வேட்பு மனுக்களை வாபஸ் பெற ஜூலை 22ஆம் தேதி கடைசி நாளாகும்.

ஜூலை 11ஆம் தேதியன்று அதிமுக கூட்டணி வேட்பாளராக ஏ.சி.சண்முகம் மனுத் தாக்கல் செய்தார். அதே நாளில் மேலும் ஆறு பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர். ஜூலை 12ஆம் தேதியன்று சுயேச்சைகள் மனுத் தாக்கல் செய்தனர். தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பில் நரேஷ் குமார், சுயேச்சையாக முன்னாள் தாசில்தார் செல்வராஜ், தேசிய மக்கள் கழகம் சார்பில் திவ்யா, இந்தியக் குடியரசு கட்சி சார்பில் ஆறுமுகம் ஆகியோரும் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் சங்கத்தின் வேட்பாளராக பலராமன், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக தீபலட்சுமி, முற்போக்கு சமாஜ்வாதி கட்சி வேட்பாளராக கணேசன் ஆகியோரும் மனுத் தாக்கல் செய்துள்ளனர். இதுவரையில் மொத்தம் 18 பேர் மனுத் தாக்கல் செய்துள்ளனர். திமுக வேட்பாளராக போட்டியிடும் அக்கட்சியின் பொருளாளரான துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் நாளை (ஜூலை 17) மனுத் தாக்கல் செய்யவுள்ளார்.

இந்நிலையில், வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் சிறப்பு செலவின கண்காணிப்பாளராக ஓய்வுபெற்ற சென்னை மண்டல வருமான வரித் துறை பொது இயக்குநர் முரளிகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

**

மேலும் படிக்க

**

**[30-45: தினகரனின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/07/16/18)**

**[ “மாற்று வேட்பாளரை மாற்றுங்கள்”- துரைமுருகனிடம் ஸ்டாலின்](https://minnambalam.com/k/2019/07/16/53)**

**[தயாராகிறது பாகுபலி 3?](https://minnambalam.com/k/2019/07/16/26)**

**[என் மகனாகப் பார்க்காதீர்கள்… ‘திமுக’காரனாகப் பாருங்கள்!](https://minnambalam.com/k/2019/07/16/27)**

**[அதிமுக தலைவராகிறாரா ரஜினி?](https://minnambalam.com/k/2019/07/15/18)**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *