மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 3 ஏப் 2020

தயாராகிறது பாகுபலி 3?

தயாராகிறது பாகுபலி 3?

பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அதன் படக்குழு மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ளது.

2015ஆம் ஆண்டில் வெளியான பாகுபலி, அதைத் தொடர்ந்து 2017ஆம் ஆண்டு வெளியான பாகுபலி 2 படங்கள் தென்னிந்திய சினிமாவின் பாக்ஸ் ஆபீஸ் பலத்தை இந்திய சினிமாவுக்கு உணர்த்திய படங்களாகும். நாம் கேட்டுப் பழகிய புராணக் கதைகளின் பாணியில் அமைந்த இவை அனைத்து மொழி ரசிகர்களையும் ஆட்கொண்டது. எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய இதில் பிரபாஸ், ராணா டகுபதி ஆகியோர் நடித்திருந்தனர். இந்தப் படங்களைத் தொடர்ந்து எஸ்.எஸ்.ராஜமெளலி ‘ஆர்ஆர்ஆர்’ என்ற வரலாற்றுப் படத்தைத் தற்போது படமாக்கி வருகிறார்.

இந்த நிலையில், பிரபாஸ், ராணா டகுபதி ஆகியோரை வைத்து புதிய படமொன்றை இயக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. பாகுபலியைத் தயாரித்த ஆர்கா மீடியாஸ் இந்தப் படத்தைத் தயாரிக்க உள்ளது. பாகுபலியில் நடித்த தமன்னா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோரும் இந்தப் படத்தில் நடிக்கவுள்ளனர்.

இரண்யகசிபு எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் டைட்டில் ரோலில் ராணா டகுபதி நடிக்கவுள்ளார். மேலும் பாகுபலியைப் போலவே இந்தப் படத்திலும் இவரே வில்லனாகவும் தோன்றவுள்ளார். புராணத்தில் வரும் இரணியகசிபு என்ற அசுர மன்னனின் கதையாக உருவாகவிருக்கும் இந்தப் படத்தை ராஜமெளலி இயக்கவில்லை என்ற அதிர்ச்சியும் கலந்துள்ளது இச்செய்தியில். அவருக்குப் பதிலாக வேறொரு முன்னணி இயக்குநர் இந்தப் படத்தை இயக்கவுள்ளார் எனத் தெரிகிறது.

அடுத்த வருடம் ஜனவரி 2020இல் இரணியகசிபு தொடங்கவுள்ளது. மேலும், இந்தப் படம் குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் இனிவரும் நாட்களில் வெளியாகவுள்ளது. பாகுபலிக்குப் பின் பிரபாஸ் நடிக்கும் சாஹோ படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகவுள்ளது.

மேலும் படிக்க

டிஜிட்டல் திண்ணை: உதயநிதியை மாசெக்கள் தேடி வரவேண்டும்- அறிவாலயத்தின் மெசேஜ் !

அதிமுக தலைவராகிறாரா ரஜினி?

திமுகவில் இணைந்த தேமுதிக மா.செ!

அவசரப்பட்டுவிட்டேனோ? புலம்பிய தங்கம்

நியூசிலாந்துக்கு 'விதி' செய்த 'சதி'!


செவ்வாய், 16 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon