வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது 7-வது செயற்கைக்கோள்

public

ஆந்திர மாநிலத்திலுள்ள ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து இன்று நண்பகல் 12.50 மணிக்கு இஸ்ரோவின் பிஎஸ்எல்வி. சி33 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இரு நாட்களுக்குமுன் இந்த ராக்கெட்டின் கவுன்டவுன் தொடங்கியது. இஸ்ரோ சார்பாக, கடல்சார் ஆராய்ச்சிக்காக மொத்தம் 7 செயற்கைக்கோள்கள் அனுப்பத் திட்டமிடப்பட்டது. இதில் ஆறு செயற்கைக்கோள்கள் ஏற்கனவே விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன. தற்போது அனுப்பப்பட்டுள்ள ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1ஜி ஏழாவது மற்றும் இறுதி செயற்கைக்கோள் ஆகும். மேலும், இந்த செயற்கைக்கோள் முழுக்க முழுக்க இந்தியாவில் வடிவமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செயற்கைக்கோளின் ஆயுட்காலம் 12 ஆண்டுகள் ஆகும். இந்த செயற்கைக்கோள் பேரிடர் காலங்களில் கடற்பயணங்களுக்கு உதவும்வகையிலும், 1500 கி.மீ. சுற்றளவுள்ள கடல் எல்லைகளை துல்லியமாகக் கண்காணிக்கவும் உதவும்.

இந்த செயற்கைக்கோள் மூலம் இந்தியா ஜி.பி.எஸ். தொழில்நுட்பத்தில் தற்சார்பு நிலை பெற்றுள்ளது. ஜி.பி.எஸ். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் ஐந்தாவது நாடாக இந்தியா மாறியுள்ளது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *