புதுச்சேரியில் ஜனநாயகப் படுகொலை : அமைச்சர் நமச்சிவாயம்

public

புதுச்சேரி ஆளுநரும், ஆட்சியாளர்களும் அதிகார மோதலில் இருப்பதால் அங்கு மக்கள் திட்டங்கள் செயல்படுத்தப்பட முடியாமல் முடங்கியுள்ளது. இந்நிலையில், புதுச்சேரி அரசின் நிலையானது, ஓடுகின்ற வண்டி ஓட… ஒற்றுமையா ரெண்டுமாடு. ஒன்னு விட்டு ஒன்னு பிரிந்தால் என்னாகும் எண்ணிப் பாரு! என்ற திரைப்படப் பாடல் போன்றுதான் புதுச்சேரி அரசின் நிலைமையும் உள்ளது.

அதிகாரவர்க்கத்தின் மோதலையொட்டி, கடந்த மார்ச் 30ஆம் தேதி சட்டமன்றத்தில் பாண்டிச்சேரி நகராட்சி ஆணையர் சந்திரசேகரை இடமாற்றம் செய்து ஆணையிட்டார் சபாநாயகர். அதைத் தொடர்ந்து, மார்ச் 31ஆம் தேதி ஆளுநர் கிரண் பேடி அறிவுறுத்தலின்பேரில் அவரது செயலாளர் தேவநீதி தாஸ், சபாநாயகருக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அந்தக் கடிதத்தை சபாநாயகர் வாங்க மறுத்துவிட்டார். அந்தக் கடிதத்தில் ஆளுநருக்குத்தான் அதிகாரிகளை மாற்றும் அதிகாரம் உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதைத் தொடர்ந்து ஆளுநரின் செயலாளர், தலைமைச் செயலாளர் மனோஜ் பரிதாவுக்கு அனுப்பியுள்ள ஒரு குறிப்பில், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை விதிகளை தகுதிவாய்ந்த அதிகாரிகள் பின்பற்றாமல், நகராட்சி ஆணையர் சந்திரசேகரை இடமாற்றம் செய்த உத்தரவு செல்லாது. அவர் நகராட்சி ஆணையராக பணியைத் தொடர வேண்டும். இது சம்பந்தமாக விரிவான அறிக்கையை தலைமைச் செயலாளர் அறிவிக்க வேண்டும் என்று, தலைமைச் செயலாளருக்கு அனுப்பிய நகல் ஒன்று பாண்டிச்சேரி நகராட்சி ஆணையர் சந்திரசேகருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் ஆளுநருக்கும், ஆட்சியாளருக்கும் நடைபெற்றுவரும் அதிகார மோதல் காரணமாக, அதிகாரிகள் யார் சொல்வதைக் கேட்பது என்று தெரியாமல் பரிதவித்து வருகிறார்கள். இதுகுறித்து ‘ஆளுநருக்கு கடந்த காலங்களில் இல்லாத அதிகாரம் இப்போதுதான் வந்துள்ளது. அனைத்து அதிகாரமும் ஆளுநருக்கு இருக்கும்போது மக்கள் ஆட்சி எதுக்கு, தேர்தல் எதுக்கு, ஒரு அட்டெண்டரை மாற்ற முதல்வருக்கு அதிகாரம் இல்லை, சட்டமன்றத்தில் சபாநாயகர் ஒரு அதிகாரியை மாற்ற ஆணையிட்டால், அது செல்லாது எனக்குத்தான் முழு அதிகாரம் என்றால், என்ன நடக்குது இங்கே? கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். இது ஜனநாயகப் படுகொலை’ என்றார் அமைச்சர் நமச்சிவாயம்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *