+பியூட்டி ப்ரியா

public

வெந்தயக்கீரை பற்றி நிறைய தகவல்களை ஹெல்த் ஹேமா சொல்லியிருக்கிறார்.

வெந்தயம், சுமார் பத்து வருடங்கள் முன்பு அவ்வளவாகப் பயன்பாட்டில் இல்லை. இன்று மிக மலிவாக நிறைய சத்துகளோடு ஆரோக்கியத்தையும் கொடுப்பதைப் புரிந்துகொண்டிருக்கிறோம். மேலும், அழகைப் பராமரிப்பதிலும் வெந்தயம் முக்கிய பங்கு வகிக்கிறது வெந்தயம்.

இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்ட்டி ஆக்சிடென்ட்டுகள் சருமத்தில் ஏற்படுகிற கொப்புளங்கள், எக்சீமா எனப்படுகிற சருமநோய் போன்றவற்றை சரியாக்குகின்றன. சருமத்தில் உள்ள தழும்புகளையும் போக்குகிறது. வெந்தயத்தை ஊறவைத்து அரைத்த விழுதில் ஒரு சுத்தமான துணியை முக்கி, முகத்தில் சிறிது நேரம் வைத்திருந்து எடுப்பது சருமத் தழும்புகளை விரட்டியடிக்கிற எளிய சிகிச்சை.

வெந்தயம் சேர்த்துத் தயாரித்த ஃபேஸ்பேக்குகள் பருக்கள், கரும்புள்ளிகள், சுருக்கங்கள் போன்றவற்றை விரட்டக்கூடியவை. வெந்தயம் வேகவைத்த தண்ணீரை ஆற வைத்து முகம் கழுவ உபயோகிக்கலாம் அல்லது வெந்தய விழுதை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் ஊறிக் கழுவலாம். இவை எல்லாமே சரும அழகை மேம்படுத்தும்.

வெந்தயத்தை முறையாக உணவில் சேர்த்துக்கொள்வது கூந்தல் ஆரோக்கியத்துக்கும் உதவும். தேங்காய் எண்ணெயில் வெந்தயத்தை ஊறவைத்து, தினமும் இரவில் அந்த எண்ணெயைத் தலையில் தடவி மசாஜ் செய்து காலையில் குளித்துவந்தால் கூந்தல் உதிர்வது கட்டுப்படும். பொடுகையும் விரட்டும்.

தொடர்ந்து வெந்தயத்தைச் சாப்பிட்டால் சுலபத்தில் கருத்தரிக்காது. முடி உதிர்வதைத் தடுக்க வெந்தயத்தைச் சீகைக்காயோடு சேர்த்து அரைத்து சிறிது ஊறவைத்துத் தலை முழுகினால் பலன் கிட்டும். முகத்தில் பரு வந்தால் வெந்தயத்தை நன்கு அரைத்து முகத்தில் அப்பினால் எரிச்சல் குறையும்; பருவும் குணமடையும்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *