பல்கலைக்கழக மானியக்குழு பட்டியலில் தமிழகத்தின் 7 கல்லூரிகள்

public

பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்க, தரக்கட்டுப்பாடு மேற்கொள்ளும் மத்திய அரசின் அமைப்பான பல்கலைக்கழக மானியக்குழு, சாதிக்கும் திறனுள்ள கல்லூரிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த ஏழு கல்லூரிகள் தேர்வாகியுள்ளன. சென்னையைச் சேர்ந்த மெட்ராஸ் கிறிஸ்துவக் கல்லூரி, மகளிர் கிறிஸ்துவக் கல்லூரி, ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி, டிஜி வைஷ்ணவ கல்லூரி, நீதிபதி பஷீர் அஹமத் சயீத் மகளிர் கல்லூரி ஆகியவையும், மதுரையைச் சேர்ந்த விவேகானந்தா கல்லூரி மற்றும் கோவையைச் சேர்ந்த சிஎம்எஸ் அறிவியல் மற்றும் கலைக் கல்லூரி ஆகியவை பல்கலைக்கழக மானியக்குழுவின் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இக்கல்லூரிகள் தங்களது வசதிகளை மேம்படுத்த 5 ஆண்டுகளில் 1.5 கோடி ரூபாய் மதிப்பிலான மானியம் வழங்கப்படும். கல்லூரிகளின் செயல்பாடுகளைப்பொறுத்து, இந்த மானியம் இருமடங்கு அதிகமாகவும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *