@நீட்: ஆடைக் கட்டுப்பாடு!

public

நீட் தேர்வு எழுத வரும் மாணவர்கள் மேற்கொள்ள வேண்டிய ஆடைக் கட்டுப்பாடுகள் குறித்து சிபிஎஸ்இ அறிக்கை வெளியிட்டுள்ளது.

எம்பிபிஎஸ், பிடிஸ் படிப்புகளுக்கான நீட் தேர்வு வரும் மே மாதம் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. நீட் தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கான ஆடைக் கட்டுப்பாடு தொடர்பான அறிவிப்பை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது.

அதன்படி, மாணவர்கள் வெளிர் நிற அரைக் கை ஆடைகளை அணிய வேண்டும். குர்தா, பைஜாமா உள்ளிட்ட முழுக்கை ஆடைகள் அணியக் கூடாது. பூ வைக்கக் கூடாது, பெரிய பட்டன் கொண்ட ஆடைகளை அணியக் கூடாது. ஹெல்த் பேண்ட், பேட்ஜ் அணியக் கூடாது. ஹீல்ஸ் இல்லாத சாதாரண வகை செருப்புகள் மட்டுமே அணிந்திருக்க வேண்டும். ஷூ சாக்ஸுக்கு அனுமதி கிடையாது. தொலைத் தொடர்பு சாதனங்கள், ஜியோமெட்ரி பாக்ஸ் அல்லது பென்சில் பாக்ஸ், கைப்பைகள் கொண்டுவரக் கூடாது. வாட்ச், பெல்ட், தொப்பி அணியக் கூடாது. கம்மல், மூக்குத்தி, மோதிரம் உள்ளிட்ட நகைகள் அணியக் கூடாது. தலையில் க்ளிப் அணியக் கூடாது. தண்ணீர் பாட்டில், உணவுப் பொருட்கள் போன்றவற்றையும் எடுத்துச்செல்லக் கூடாது.

2017ஆம் ஆண்டு, மே 7ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் 11.35 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். கேரள மாநிலம் கண்ணனூரில் உள்ள தேர்வு மையத்திற்கு வந்த 19 வயது மாணவியைத் தேர்வு மைய கண்காணிப்பாளர் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்தபோது பீப் சத்தம் ஒலித்ததால், கண்காணிப்பாளர் மாணவியின் உள்ளாடையை அகற்றும்படி தெரிவித்துள்ளார். மாணவி விளக்கம் அளித்தும் ஏற்கவில்லை. இதனால், மாணவி தனது உள்ளாடையைக் கழற்றி அவரது தாயாரிடம் கொடுத்துவிட்டுத் தேர்வு எழுதச் சென்றார். வெளியே வந்த அவர் கடும் மன உளைச்சலுக்கு ஆளானதாகத் தெரிவித்தார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பரவிப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தும்படி கேரள மகளிர் ஆணையம் உத்தரவிட்டது. மாணவியின் உள்ளாடையை அகற்றச் சொன்ன டிஐஎஸ்கே ஆங்கிலப் பள்ளியைச் சேர்ந்த ஷிஜா, ஷபீனா, பிந்து, ஷகினா ஆகிய நான்கு ஆசிரியைகளும் ஒரு மாதத்திற்கு இடைநீக்கம் செய்யப்பட்டனர்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *