[தூய்மை குறித்த குறும்படப் போட்டி!

public

தூய்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், திருச்சியில் பல்வேறு போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டின் ஸ்வாச் சர்வக்‌ஷான் திட்டத்தின் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டத்தைச் சுத்தம் செய்யும் வகையில், இந்தப் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. திருச்சி நேஷனல் கல்லூரியுடன் இணைந்து இந்தப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. ஐந்து வகையான கருத்துகளைக் கொண்டு, இது நடத்தப்படுகிறது.

குப்பைத் தொட்டி இல்லா திருச்சி, குப்பைகள் இல்லா திருச்சி, திறந்தவெளிக் கழிப்பிடம் இல்லா திருச்சி, பிளாஸ்டிக் இல்லா திருச்சி, நமது குப்பை – நமது பொறுப்பு ஆகிய தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இந்தப் போட்டிகளில் பங்கேற்பவர்கள் தங்களது குறும்படம் மற்றும் விளம்பரப் படங்களைச் சமர்ப்பிக்கலாம். இதன்மூலம், மக்களுக்கு திடக் கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த மூன்று குறும்படங்கள் தேர்வு செய்யப்படும். வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.50,000 பரிசுத் தொகை வழங்கப்படும். இதற்காக www.cleantrichy.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். இதற்கு விருப்பமுள்ளவர்கள், தங்களது குறும்படத்தை செப்டம்பர் 20ஆம் தேதிக்குள் ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.

“குறும்படங்கள் குறைந்தபட்சம் ஒரு நிமிடம் இருக்க வேண்டும். எட்டு நிமிடங்களுக்கு மேலாக செல்லக் கூடாது. விளம்பரம் படம் 60 நொடிகளுக்குள் இருக்க வேண்டும்.

இந்தப் போட்டிகள் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கே நடத்தப்படுகிறது என திருச்சி மாநகராட்சி ஆணையர் என்.ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *