;திங்கள்கிழமை இணைப்பு?

public

இணைப்பு குறித்த பேச்சுவார்த்தைச் சுமுகமாக நடந்துகொண்டிருக்கிறது. ஓரிரு நாட்களில் நல்ல முடிவு தெரிவிக்கப்படும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுடன் இன்று (சனிக்கிழமை) இரண்டாவது நாளாக ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் மைத்ரேயன் எம்.பி., கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், “இணைப்பு பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இன்னும் ஓரிரு நாளில் நல்ல முடிவு எட்டப்படும். அதிமுகவில் கருத்து வேறுபாடு இல்லை. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் வழியில் வந்த அதிமுகவைக் காப்பாற்றும் நோக்கிலும், அவர்களின் அரசியல் பாதையை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தும் வகையிலும் நாங்கள் செயல்படுகிறோம். நாட்டு மக்கள் மற்றும் தொண்டர்களின் விருப்பத்தின்படியே அணிகள் இணைப்பு இருக்கும்” என்று தெரிவித்தார்.

இதற்கிடையில், தஞ்சையில் பேட்டியளித்த அதிமுக எம்பி வைத்திலிங்கம், அதிமுக இணைப்பு குறித்து இன்னும் இரு தினங்களில் முடிவு கிடைக்கும்” என்றார்.

இரு அணிகள் இணைப்பு குறித்த அறிவிப்பு வரும் திங்கள்கிழமை வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன் ஓபிஎஸ் அணியின் [கே.பி.முனுசாமி]( http://minnambalam.com/k/2017/08/19/1503126291) செய்தியாளர்களிடம், “அதிமுகவின் இரு அணிகளும் இணைய தான் எவ்விதத்திலும் முட்டுக்கட்டையாக இல்லை. தர்ம யுத்தத்தின் மூலக்கூறு நிறைவேற்றப்படாவிட்டால் இணைப்பில் அர்த்தம் இல்லை. தர்ம யுத்தத்தின் மூலக் கூறே கட்சியிலிருந்து சசிகலா குடும்பத்தை வெளியேற்றுவதுதான். இருப்பினும், ஓ.பன்னீர்செல்வம் எடுக்கும் முடிவுக்கு நாங்கள் அனைவரும் முழுமையாகக் கட்டுப்படுவோம்” எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *