சிறுமிகளுக்கு கூட பாதுகாப்பில்லை : ஸ்டாலின் வேதனை!

public

தமிழகத்தில் தற்போது நடைபெற்றுவரும் ஆட்சியில் பெண்களுக்கு குறிப்பாக, சிறுமிகளுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் இதை தட்டிக்கேட்க வேண்டிய இடத்தில் உள்ள காவல் துறையினரோ கூவத்தூரில் அதிமுக எம்.எல்.ஏ.,க்களுக்கு பாதுகாப்பு வழங்குவதும், சட்டமன்றத்தில் எதிர்கட்சியினரை வெளியேற்றுவதற்கும்தான் செயல்படுகின்றனர் என்று, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

எண்ணூரில் கொல்லப்பட்ட சிறுமி ரித்திகாவின் குடும்பத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்டாலின், ‘எண்ணூர் பகுதியில் ரித்திகா என்ற 3 வயதுச் சிறுமி கொடூரமான முறையிலே கொலை செய்யப்பட்டார். அந்தக் குழந்தையின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் சொல்வதற்காக வந்திருக்கிறோம். இந்த ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு எந்தளவுக்கு மோசமான நிலையில் இருக்கிறது என்பதற்கு இவையெல்லாம் இன்றைக்கு சாட்சிகளாக இருந்துகொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக, பெண்களுக்கு அதையும் தாண்டி சொல்லவேண்டுமெனச் சொன்னால் சிறுமிகளுக்கு இன்றைக்கு மிகப்பெரிய கொடுமைகள் நடந்துகொண்டிருக்கின்றன. உதாரணமாக, அரியலூர் பகுதியிலே நந்தினி என்ற பெண் கற்பழிக்கப்பட்டு அந்தக் கருவை சிதைத்து கொலை செய்திருக்கும் கொடுமை நடந்திருக்கிறது. அதைத் தொடர்ந்து, போரூரிலே ஹாசினி என்ற சிறுமி கொலை செய்யப்பட்ட கொடுமை, இப்போது எண்ணூர் பகுதியிலே 3 வயதுச் சிறுமி ரித்திகா கொடுமையான முறையிலே கொலை செய்யப்பட்டிருக்கிறாள்.

இந்தக் கொடுமைகளை எல்லாம் தட்டிக் கேட்பதற்கு சட்டம், ஒழுங்கை பேணிப் பாதுகாக்கும் நிலையில் இருக்கும் காவல்துறை, கூவாத்தூரில் பாதுகாப்பு தரும் நிலையில்தான் இருந்துகொண்டிருக்கிறது. அதேபோல, நேற்றைய முன்தினம் தலைமைச் செயலகத்திலே அவர்கள் வாக்கெடுப்பை நிறைவேற்றிக்கொள்ள அடியாட்களை வைத்து எங்களைப் போன்ற சட்டமன்ற உறுப்பினர்களை சட்டமன்றத்துக்குள் அடித்து வெளியில் தூக்கிப் போடுவதற்குத்தான் காவல்துறையை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்களே தவிர, இதுபோன்ற சட்டம், ஒழுங்கை பாதுகாக்கிற, பெண்களுக்கு பாதுகாப்புத் தருகிறநிலையில் இந்தக் காவல்துறை இல்லை என்பது இந்த ஆட்சியில் வெட்கப்பட வேண்டிய, வேதனைப்பட வேண்டிய ஒன்றாக இருக்கிறது’ என்றார்.

இதைத் தொடர்ந்து, முதல்வர் பழனிச்சாமி மேலும் 5௦௦ மதுபானக் கடைகளை மூட உத்தரவிட்டுள்ளது குறித்துப் பேசுகையில், ‘அவர் எத்தனை கையெழுத்து வேண்டுமென்றாலும் போடட்டும். நான் கேட்பது இதுபோன்ற சிறுமிகள் பாதுகாப்பில் குறிப்பாக, பெண்கள் பாதுகாப்புக்காக பல அம்ச திட்டங்களை ஜெயலலிதா அறிவித்தார். இப்போது அவர் என்னதான் கோப்புகளில் கையெழுத்து போட்டுக்கொண்டிருந்தாலும் தொடர்ந்து பெண்கள், சிறுமிகள் கற்பழிக்கப்பட்டு, கொலை செய்யப்படும் கொடுமை நடந்துகொண்டிருக்கிறது. இதை தடுக்கும் முயற்சியிலே சசிகலாவின் பினாமி முதலமைச்சராக இருக்கும் பழனிச்சாமி ஈடுபட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்’ என்றார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *