‘ஊரடங்கை அமல்படுத்தாதிருந்தால்…’ : மத்திய சுகாதாரத் துறை!

public

இந்தியாவில் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு அமல்படுத்தாமல் இருந்திருந்தால் 8.2 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பர் என்று மத்திய சுகாதாரத் துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பலி எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது. அமெரிக்காவில் மட்டும் 5,03,847 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17,23,735ஆக இருக்கிறது.

இந்நிலையில், மத்திய சுகாதாரத் துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் ஒரு அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்துள்ளார். “ஒருவேளை இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தாமல் இருந்திருந்தால் நாட்டில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8.2 லட்சமாக இருந்திருக்கும்” என்று தெரிவித்துள்ளார். இது அமெரிக்காவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட அதிகமாகும்.

லாவ் அகர்வால் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படாமல், கொரோனா தடுப்பு நடவடிக்கை மட்டும் எடுத்திருந்தால் கூட பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.2 லட்சமாக இருந்திருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் 1,035 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 40 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,447ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 649ஆகவும் இருக்கிறது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலால் 5 லட்சம் antibody test கிட்ஸ் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவை இன்னும் வரவில்லை. ஒரு லட்சம் தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகளும், 11,500 ஐ.சி.யு படுக்கைகளும் நாடு முழுவதும் மருத்துவமனைகளில் இருக்கின்றன” என்று தெரிவித்துள்ளார்.

*-கவிபிரியா*�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *