]சியோமியில் அறிமுகமாகிறதா ‘வனிலா’?

public

�சியோமி நிறுவனத்தின் எம்ஐ ஏ2 போன் குறித்த புதுத் தகவல் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் மலிவு விலை செல்போன்களை விற்பனை செய்வதில் முன்னணியில் உள்ள சியோமி குறிப்பிட்ட இடைவெளிகளில் தேர்ந்தெடுத்த மாடல்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் எம்ஐ ஏ2 எனும் போனை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது.

ஸ்பெயினிலுள்ள மாட்ரிட்டில் ஜூலை 24இல் நடைபெறவுள்ள அந்நிறுவனத்தின் உலகளாவிய சந்திப்பு நிகழ்ச்சியில் இந்த போன் அநேகமாக அறிமுகம் செய்யப்படலாம் எனத் தெரிகிறது. டெல்லியில் நடைபெற்ற இதே போன்ற ஒரு நிகழ்ச்சியில்தான் எம்ஐ ஏ 1 போன் வெளியாகி இருந்தது.

**சிறப்பம்சங்கள்**

தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி இந்த செல்போனில் 5.99 இன்ச் திரை, Snapdragon 660 SoC, 4GB RAM + 128GB, 3010mAh பேட்டரி வசதி, 3.0 குயிக் சார்ஜிங், 20 மெகா பிக்ஸல் முன்பக்க கேமரா ஆகிய வசதிகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக இந்த மாடலில் ஆண்ட்ராய்டு ஓரியோவுக்குப் பதிலாக அடுத்த மாடலான ஆண்ட்ராய்டு வனிலா இயங்குதளம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விலையைப் பொறுத்தவரையில், 32 GB ROM ரூ.20,000, 64 GB ROM ரூ.22,800, 128 GB ROM ரூ.25,600 ஆகிய விலைகளில் கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *