இறுதி வாக்காளர் பட்டியல்: பெண் வாக்காளர்களே அதிகம்!

politics

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியலை தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் கடந்த ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஜனவரி 1ஆம் தேதி வாக்காளராகும் தகுதி நாளாக கொண்டு இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிப்பதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. ஏற்கனவே வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, புதிதாக பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வந்தது. இதற்காக நடத்தப்பட்ட சிறப்பு முகாமில் 10 லட்சம் பேர் விண்ணப்பம் செய்திருந்தனர்.

இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், இன்று(ஜனவரி 5) இறுதி வாக்காளர் பட்டியலை மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ வெளியிட்டார்.

அதில் வாக்காளர்கள் மொத்த எண்ணிக்கை, மாவட்ட வாரியாக, இனம் வாரியான வாக்காளர்கள், அதிக வாக்காளர்கள், குறைந்த வாக்காளர்கள், இளம் வாக்காளர்கள் கொண்ட தொகுதிகள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது.

வாக்காளர் பட்டியலில் புதிதாக 10.17 லட்சம் பேர் சேர்க்கப்பட்டுள்ளதையடுத்து, தமிழ்நாட்டில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 6.38 கோடியாக உள்ளனர். இதில் ஆண்கள் 3,12,26,750 பேர் பெண்கள், 3,23,91,256 பேர். மூன்றாம் பாலினத்தவர் 7, 804 பேர். 2,86,174 பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட சோழிங்கநல்லூர் உள்ளது. சோழிங்கநல்லூரில் 7,11,7755 வாக்காளர்கள் உள்ளனர். இதற்கடுத்தப்படியாக, கோவை மாவட்டத்திற்குட்பட்ட கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதி உள்ளது. இங்கு 4,76,467 பேர் உள்ளனர்.

தமிழ்நாட்டிலேயே மிகக் குறைந்த வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக நாகப்பட்டினம் மாவட்டத்திற்குட்பட்ட கீழ்வேளூர் உள்ளது. இங்கு 1,78,517 வாக்காளர்கள் உள்ளனர்.

இன்று வெளியிடப்பட்ட [வாக்காளர் பட்டியலை](https://www.elections.tn.gov.in/) அதற்கான இணையதளப் பக்கத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

**-வினிதா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *