Stalin asks Modi for meeting time

வெள்ளத்தில் தென் மாவட்டங்கள்: மோடியிடம் நேரம் கேட்கும் ஸ்டாலின்

அரசியல்

சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களை மிக்ஜாம் புயலும், தற்போது நெல்லை உள்ளிட்ட தென்‌ மாவட்டங்களை வெள்ளமும் புரட்டிப்போட்டிருக்கும்‌ நிலையில்‌ பிரதமர்‌ மோடியை சந்திக்க நேரம் கேட்டு முதல்வர்‌ மு.க.ஸ்டாலின்‌ கடிதம் எழுதியுள்ளார். Stalin asks Modi for meeting time

எதிர்கட்சிகள் ஒன்று சேர்ந்து அமைத்துள்ள ’இந்தியா கூட்டணி’யின் 4வது ஆலோசனை கூட்டம் டெல்லியில் நாளை(டிசம்பர் 19) பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ளது.

இதற்கிடையே திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 4 தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில்,

மீட்பு நிவாரணப் பணிகளில் ஈடுபடுவதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினின் பயணம் ரத்து செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி பயணத்தில் இதுவரை எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

திட்டமிட்டபடி இந்தியா கூட்டணியில் கலந்து கொள்வதற்காக அவர் இன்று இரவு விமானம் மூலம் டெல்லி செல்ல உள்ளார்.

நாளை பிற்பகல் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்று மாலையே மீண்டும் சென்னை திரும்ப உள்ளார்.

இதற்கிடையே டெல்லி செல்லும் இந்த நேரத்தினை பயன்படுத்தி, மிக்ஜாம் புயல் மற்றும் தென்‌ மாவட்ட மழை, வெள்ள பாதிப்புகள்‌ குறித்து பிரதமர்‌ மோடியை சந்திக்க முதல்வர் தற்போது நேரம்‌ கோரியுள்ளார்‌.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்‌ மற்றும்‌ திருவள்ளூர்‌ மாவட்டங்களில்‌ அண்மையில்‌ பெய்த மிக்ஜாம் புயல்‌ மற்றும்‌ கனமழையால்‌ ஏற்பட்ட பாதிப்புகளுக்கு விரைந்து நிதி ஒதுக்க கோரவும்‌,

தற்போது தென்‌ மாவட்டங்களில்‌ பெய்து வரும்‌ அதி கனமழையால்‌ ஏற்பட்ட பாதிப்புகள்‌, மீட்பு மற்றும்‌ நிவாரணப்‌ பணிகள்‌ குறித்து எடுத்துக்‌ கூறி ஆலோசிக்கவும்‌,

நாளை டெல்லியில் பிரதமர்‌ நரேந்திர மோடியை சந்திக்க தமிழக முதல்வர்‌ மு.க. ஸ்டாலின்‌ நேரம்‌ கோரி கடிதம்‌ எழுதியுள்ளார்‌” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

பில்லா : வெற்றியின் பின்னிருந்த அபாயம்!

நிவாரண பணிகளுக்கு மேலும் 4 அமைச்சர்கள் நியமனம்… நெல்லை விரைந்தார் உதயநிதி!

“மக்கள் வரலனாலும் வெளியேத்துங்க” : தூத்துக்குடி கலெக்டரின் அவசரக் குரல்!

Stalin asks Modi for meeting time

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *